3வது முறையாக டிஆர்பியில் முதல் இடத்தை விட்டு கொடுக்கதாக சிங்கப்பெண்ணே சீரியல் ., பர்ஸ்ட் வர திணறும் கயல்!!

சீரியல்களுக்கு பெயர் போன தொலைக்காட்சி என்றால் அது சன் டிவி தான். இந்த தொலைக்காட்சி ஆரம்பித்ததில் இருந்து இப்பொழுது வரை மக்களை கவர வேண்டும் என்று அடுத்தடுத்து புது புது சீரியல்களை ஒளிபரப்பி மக்களை டிவி சேனலை மாற்ற விடாமல் பார்த்து கொண்டது. இதனால் சன் டிவியின் டிஆர்பி உச்சத்தில் இருந்தது. அதேபோல் கடந்த வாரமும் டிஆர்பி-யில் முதல் ஐந்து இடத்தை சன் டிவி தான் பிடித்துள்ளது. அப்படி எந்தெந்த சீரியல் முதல் ஐந்து இடத்தை பிடித்துள்ளது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

1. சிங்க பெண்ணே சீரியல்:

சன் டிவியில் சில மாதங்களுக்கு முன்பு ஒளிபரப்பாக தொடங்கிய இந்த தொடர் மக்களின் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. இந்த  சீரியல்  11.01 புள்ளிகளை பெற்று முதல் இடத்தை பிடித்த நிலையில், கடந்த இரண்டு வாரமாக முதல் இடத்தை  தக்க வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

2. கயல் சீரியல்:

தொடக்கத்தில் டிஆர்பியில் முதல் இடத்தில் இருந்து வந்த இந்த தொடர் கடந்த வாரத்தில் 2வது இடத்தை பிடித்த  நிலையில் இந்த தடவையும் 10.34 புள்ளிகளை பெற்று 2வது இடத்தை தக்க வைத்திருக்கிறது.

3. எதிர்நீச்சல் சீரியல்:

சன் டிவியின் முக்கிய சீரியலாக இருந்து வந்த இந்த சீரியல் 9.98 புள்ளிகளை பெற்று 3வது இடத்தில் உள்ளது. கடந்த வாரத்திலும் 3 வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

4. வானத்தைப்போல சீரியல்:

இந்த சீரியல்  9.79 புள்ளிகளை பெற்று 4வது இடத்தை பிடித்திருக்கிறது.

5. சுந்தரி சீரியல்:

இந்த தொடர்  கடந்த வாரத்தில் 5வது இடத்தில் இருந்த நிலையில் இந்த வாரம் 8.56 புள்ளிகளை பெற்று 5வது இடத்தை பிடித்திருக்கிறது.

நேற்று மறைந்த பூனம் பாண்டே.., உயிரோடு எழுந்து வந்ததால் பரபரப்பு., அதிர்ச்சியை கிளப்பிய வீடியோ வைரல்!!

Leave a Comment