நம்ம சூர்யாவா இது? உடல் எடையை குறைத்து இப்படி ஆய்ட்டாரே? ஷாக்கிங் போட்டோ வைரல்!!

பொதுவாக தமிழ் சினிமாவில் உடலை வருத்திக் கொண்டு நடிக்கும் நடிகர்கள் ஒரு சிலர் மட்டுமே இருக்கின்றன. அந்த லிஸ்டில் ஒருவராக இருப்பவர் தான் நடிகர் சூர்யா. தற்போது இவர் நடிப்பில் கங்குவா திரைப்படம் படு பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. நேற்று இப்படத்தின் செகண்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் இப்படத்தின் ஷூட்டிங் முடிவடைந்த நிலையில் இப்பொழுது படக்குழு அடுத்த கட்ட  பணியில் தீவிரமாக இருந்து வருகின்றனர்.

இந்த படத்தை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாக இருக்கும் அரசியல் படத்தில் சூர்யா நடிக்க இருக்கிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியான நிலையில் தற்போது சூர்யா குறித்த ஒரு போட்டோ வெளியாகி அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. அதாவது நடிகர் சூர்யா 43 வது  படத்திற்காக தனது உடல் எடையை குறைத்துள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு உடல் எடையை குறைத்துள்ளார் என்று கூறி வருகின்றனர். 

Leave a Comment