தமிழகத்தில் இந்த நான்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிவிப்பு!!

தமிழகத்தில் இந்த நான்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் அதிகமாக இருந்து வந்தாலும் ஒரு சில பகுதிகளில் கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை அதிகமாக இருந்து வருவதால் குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் அவதி பட்டு வந்தன.

கடந்த 2 நாட்களாக தான் ஓரளவுக்கு தண்ணீர் வரத்து குறைந்து காணப்பட்டதால் தற்போது சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கியுள்ளனர். இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” தமிழகத்தில் முக்கிய மாவட்டங்களான  தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரம் (7 மணி வரை )  இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. weather report news in tamil

ஓடும் ரயிலில் பிறந்த பெண் குழந்தை – மகளுக்கு மகாலட்சுமி பெயர் சூட்டிய இஸ்லாமிய தம்பதி!!

Leave a Comment