Home » செய்திகள் » 500 காளை மாடுகள் திமிற.., 300 வீரர்கள் அடக்க., கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் – தமிழக முதல்வர் இன்று திறந்து வைப்பு!!

500 காளை மாடுகள் திமிற.., 300 வீரர்கள் அடக்க., கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் – தமிழக முதல்வர் இன்று திறந்து வைப்பு!!

அம்மாடி.., என்னா பிடி.., சொல்லி அடித்த அபி சித்தர்., கீழக்கரை ஜல்லிக்கட்டில் முதல் பரிசு என்னனு தெரியுமா?

தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாகக் இருக்கும் ஜல்லிக்கட்டு போட்டி தொடர்ந்து நடைபெற்று கொண்டு இருக்கிறது. ஜல்லிக்கட்டுக்கு பெயர் போன மூன்று இடங்கள் என்றால் அது மதுரையில் உள்ள அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரம். இந்த வீர விளையாட்டில் எக்கசக்க இளைஞர்கள் களமிறங்கி காளை மாட்டை அடக்கி பல பரிசுகளை பெற்று செல்கின்றனர். மேலும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த ஏதுவாக மதுரையில் ஒரு மைதானம் அமைக்கப்படும்  என்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்திருந்தார்.

அதன்படி மதுரை அலங்காநல்லூர் பகுதியில் இருந்து கிட்டத்தட்ட 15 கி.மீ தொலைவில் சுமார் 6.80 ஏக்கர் பரப்பளவில் ஏறுதழுவுதல் அரங்கம், பார்வையாளர்கள் அமரும் இருக்கைகள் – 4,500, அரங்க கட்டிட பரப்பளவு – 77683 சதுர அடி,  என பிரமாண்ட மைதானம் கட்டப்பட்டு உள்ளது. இதற்கு கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் என பெயரிடப்பட்டுள்ள நிலையில் இன்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் திறந்து வைக்க இருக்கிறார். மேலும் இன்று 500 காளைகள் சீறிப் பாய 300 வீரர்கள் அதை அடக்க போகிறார்கள். அதனை பார்க்க மக்கள் ஆவலுடன் காத்து கொண்டிருக்கின்றனர். 

லோகேஷ் பார்முலாவை கையில் எடுத்த நெல்சன்., இவருக்கு ஒர்க் அவுட்டாகுமா? ஓகே சொல்லி பற்ற வைத்த சூப்பர் ஸ்டார்!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top