மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலைவாய்ப்பு 2023மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலைவாய்ப்பு 2023

   மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலைவாய்ப்பு 2023 . தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்தில் இயங்கி வரும் மாவட்ட சுகாதார சங்கத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல்வேறு பணியிடங்கள் காலியாக இருக்கின்றது. அதன்படி காலியாக இருக்கும் பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதியான பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட இருக்கின்றனர். எனவே விருதுநகர் மாவட்ட சுகாதார சங்கத்தில் காலியாக இருக்கும் பணியிடங்கள் விவரம் , கல்வி , வயது , சம்பளம் , விண்ணப்பிக்கும் முறை , அனுபவம் , விண்ணப்பிக்க முக்கிய தேதி மற்றும் தேர்வு முறைகள் போன்ற அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.

மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலைவாய்ப்பு 2023

மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலைவாய்ப்பு 2023

அமைப்பின் பெயர் :

  விருதுநகர் மாவட்டத்தில் கீழ் இயங்கி வரும் மாவட்ட சுகாதார சங்கம் ( District Health society )ல் காலியாக இருக்கின்றது.

காலிப்பணியிடங்களின் பெயர் :

  1. பல் மருத்துவர் 

  2. பல் உதவியாளர் ( Dental Assistant )

  3. திட்ட மற்றும் நிர்வாக உதவியாளர் ( Program cum Administrative Assistants ) போன்ற பணியிடங்கள் காலியாக இருக்கின்றது என்று DHSன் சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :

  1. பல் மருத்துவர் – 3

  2. பல் மருத்துவ உதவியாளர் – 3

  3. திட்ட மற்றும் நிர்வாக உதவியாளர் – 1 என மொத்தம் ஏழு காலிப்பணியிடங்கள் இருக்கின்றது.

கல்வித்தகுதி :

  1. பல் மருத்துவர் :

    அரசு அங்கீகாரம் அளித்த பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் ஏதேனும் ஒரு மருத்துவக்கல்லூரியில் பல் மருத்துவத்துறையில் இளங்கலை பட்டம் (BDS) முடித்திருக்க வேண்டும்.

  2. பல் மருத்துவ உதவியாளர் :

    அரசின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு கட்டாயம் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். மேலும் பல் மருத்துவத்தில் உதவியாளர் பணியில் அனுபவம் இருப்பவர்கள் விண்ணப்பிக்க முடியும். 

  3. திட்ட மற்றும் நிர்வாக உதவியாளர் :

     அரசாங்கத்தின் கீழ் இயங்கி வரும் ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் கீழ் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்று இருக்க வேண்டும். மேலும் MS Office துறையில் சான்றிதழ் கல்வி முடித்து இருக்க வேண்டும். மேலும் திட்ட மற்றும் நிர்வாக உதவியாளர் பணியில் ஒரு வருடம் அனுபவம் இருப்பவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.

மத்திய பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2023 ! நேர்காணல் மட்டுமே !

வயதுத்தகுதி :

  1. பல் மருத்துவர் – குறிப்பிடப்படவில்லை 

  2. பல் மருத்துவ உதவியாளர் – குறிப்பிடப்படவில்லை 

  3. திட்ட மற்றும் நிர்வாக உதவியாளர் – 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் :

  1. பல் மருத்துவர் – ரூ. 34,000 வரையில்    

  2. பல் மருத்துவ உதவியாளர் – ரூ. 13,800 வரையில் 

  3. திட்ட மற்றும் நிர்வாக உதவியாளர் – ரூ. 12,000 வரையில் மாத ஊதியமாக தகுதியான பணியாளர்களுக்கு அரசின் வழிமுறைகளின் படி வழங்கப்படும்.

விண்ணப்பிக்க வேண்டிய தேதி :

  29.09.2023ம் தேதிக்குள் விருதுநகர் DHSல் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

  விருதுநகர் மாவட்ட சுகாதார சங்கத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு தபால் மூலம் விண்ணப்பபடிவத்தினை சமர்ப்பிக்க வேண்டும்.

OFFICIAL NOTIFICATIONDOWNLOAD 

             

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

  துணை இயக்குநர் சுகாதார பணிகள் ,

  மாவட்ட நலவாழ்வு சங்கம் ,

  துணை இயக்குநர் சுகாதார பணிகள் அலுவலகம் ,

  மாவட்ட ஆட்சியர் வளாகம் ,

  விருதுநகர் – 626001 ,

  தமிழ்நாடு .

விண்ணப்பிக்க தேவையானவை :

  1. இரண்டு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் 

  2. பிறப்பு சான்றிதழ் 

  3. கல்வி சான்றிதழ் ( 10வது , 12வது , டிகிரி சான்றிதழ் )

  4. தமிழ் தகுதிக்கான சான்றிதழ் 

  5. வருவாய் சான்றிதழ் 

  6. வாக்காளர் அடையாள அட்டை 

  7. பஞ்சாயத்து / நகராட்சி / மாநகராட்சி ரசீது 

  8. ரேசன் கார்டு 

  9. ஆதார் கார்டு 

10. சாதி சான்றிதழ் 

விண்ணப்பபடிவம் பெறுவது எப்படி :

  1. மேலே இருக்கும் லிங்க் பயன்படுத்தி விண்ணப்பபடிவம் பதிவிறக்கம் செய்து படிவத்தினை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம்.

  2. அருகில் இருக்கும் மாவட்ட துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம் அல்லது வட்டார சுகாதார நிலையங்களில் விண்ணப்பபடிவத்தினை நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம். 

விண்ணப்பக்கட்டணம் :

   தபால் மூலமே விருதுநகர் DHSல் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இருப்பதால் விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

எங்கள் முக நூல் பக்கத்தில் இணைந்திட இங்கே கிளிக் செய்யவும்

தேர்ந்தெடுக்கும் முறை :

   விருதுநகர் மாவட்ட சுகாதார சங்கத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு தகுதியான பணியாளர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியில் அமர்த்தப்பட இருக்கின்றனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *