தமிழக மாணவர்களே ஒரு குட் நியூஸ்.., இந்த மாவட்டத்தில் உள்ளுர் விடுமுறை.., மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய அறிக்கை!!தமிழக மாணவர்களே ஒரு குட் நியூஸ்.., இந்த மாவட்டத்தில் உள்ளுர் விடுமுறை.., மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய அறிக்கை!!

பொதுவாக பிரசித்தி பெற்ற கோவில் திருவிழாக்களின் போது எல்லா மக்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று அரசு சார்பாக பொது விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இப்போது ஒரு மாவட்டத்திற்கு வருகிற ஜனவரி 30ம் தேதி பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதாவது தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படும் மாவட்டமான தஞ்சாவூரில் தியாகராஜர் ஆராதனை திருவிழா ஒவ்வொரு வருடமும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடமும் சீரும் சிறப்புமாய் கொண்டாடப்பட இருக்கிறது.

அதன்படி  வருகிற ஜனவரி 26ம் தேதி 177 வது சங்கீத மும்மூர்த்திகளின் தியாகராஜர் ஆராதனை திருவிழா தொடங்க இருக்கிறது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான மங்கள இசை வருகிற ஜனவரி 30ம் தேதி நடக்க இருக்கிறது. இதில் பல இசை கலைஞர்கள் கலந்து கொண்டு இசையின் மூலம் அஞ்சலி செலுத்துவர். எனவே இந்த நாளில் மக்களும் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஜனவரி 30ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த விடுமுறையை ஈடுகட்டும் விதமாக பிப்ரவரி 10 ஆம் தேதி பணி நாளாக அறிவித்துள்ளார். 

தமிழக மக்களே உஷார்., இந்த 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் பிச்சு உதற போகும் கனமழை – வானிலை மையம் தகவல்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *