திருப்பூர் பனியன் கம்பெனியில் பயங்கர தீ விபத்து – பல லட்சம் மதிப்புள்ள துணிகள் எரிந்து நாசம்!!

Fire Accident திருப்பூர் பனியன் கம்பெனியில் பயங்கர தீ விபத்து: தமிழகத்தில் பனியன் கம்பெனிகளுக்கு பெயர் போன ஊர் தான் திருப்பூர். இந்த ஊரில் ஏகப்பட்ட பனியன் கம்பெனிகள் இருக்கிறது. அப்படி  திருநாவுக்கரசு என்பவர் திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியில்  பனியன் கம்பெனி ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்த நிறுவனத்தில் கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வந்துள்ளனர்.

வழக்கம் போல் இன்று பணியாளர்கள்  பனியன் துணிகளை ஒரு பகுதியில் அடுக்கி வைத்திருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக  துணிகளை அடுக்கி வைக்கப்பட்டிருந்த பகுதியில் தீ பற்றியுள்ளது. இதை பார்த்த பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில் தீயை அணைக்க முயற்சித்த போது எந்த பயனும் ஏற்படாமல் இருந்து வந்ததால் உடனே கம்பெனியை விட்டு வெளியே வர தொடங்கியுள்ளனர்.

இதனை தொடர்ந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட கொஞ்ச நேரத்தில் தீயணைப்பு ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்க ஆரம்பித்தனர். கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர்.

Also Read: மதுபிரியர்களுக்கு Happy நியூஸ் – டாஸ்மாக்கிற்கு வரப்போகும் 100 மில்லியில் மது பாட்டில்? எவ்வளவு தெரியுமா?

இந்த தீ விபத்தில்  பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பனியன் துணிகள் எரிந்து நாசமாகின. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் காவல்துறை வழக்குப்பதிவு செய்து தீ எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Leave a Comment