தமிழ் சினிமாவில் பொதுவாக பண்டிகை நாட்களில் புது படங்கள் இறங்குவது வழக்கமான ஒன்றுதான். அதையும் விட ரஜினி, விஜய், சூர்யா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் படங்கள் வெளியானால் ரசிகர்கள் அதை டபுள் ட்ரீட்டாக கொண்டாடுவார்கள். அந்த வகையில் மக்கள் வரப்போகும் பொங்கல் பண்டிகையை கொண்டாட இருக்கும் நிலையில் நாளை வெளியாக இருக்கும் படங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
அயலான்:
இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமார் என்ற இயக்குனர் தான் அயலான் படத்தை எடுத்துள்ளார். இதில் ஹீரோவாக சிவகார்த்திகேயன் நடிக்க, அவருக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ள இந்த படம் நாளை வெளியாக இருக்கிறது.
கேப்டன் மில்லர்:
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் லீடு ரோலில் நடிகர் தனுஷ், பிரியங்கா மோகன் நடித்துள்ளனர். குறிப்பாக கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் வில்லனாக நடிக்க ஜிவி இசையமைத்துள்ளார். இப்படம் நாளை திரையரங்கில் வெளியாக இருக்கிறது.
நயன்தாராவின் “அன்னபூரணி” படத்தை Delete செய்த நெட்பிளிக்ஸ்.., மன்னிப்பு கேட்ட படக்குழு.., என்ன நடந்தது?
மிஷன்:
பா. விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள மிஷன் திரைப்படத்தில் அருண் விஜய் மற்றும் எமி ஜாக்சன் நடித்துள்ளனர். ஹாலிவுட் ரேஞ்சுக்கு எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் இப்படம் நாளை ரிலீஸாக இருக்கிறது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்துமஸ்:
பாலிவுட்டில் விஜய் சேதுபதி மற்றும் கத்ரீனா கைப் சேர்ந்து நடித்த திரைப்படம் தான் கிறிஸ்துமஸ். ஜவான் படத்துக்கு பிறகு இந்த படத்தில் விஜய் சேதுபதி படத்தில் நடித்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு இருந்து வருகிறது. இந்த படமும் நாளை வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
எனவே இந்த நான்கு படங்களில் மக்களின் அமோக வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைக்க போவது எந்த படம் என்று பொறுத்து இருந்து பார்க்கலாம். உங்களுக்கு எந்த படம் வெற்றியடையும் என்று நினைக்கிறீர்கள் என கமெண்ட் செய்யுங்கள்.