போக்குவரத்து துறை ஊழியர்கள் ஏற்கனவே அறிவித்த படி தமிழகம் முழுவதும் நாளை முதல் பஸ் ஸ்ட்ரைக் உறுதி. ஒருமணி நேரமாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் உடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில் பொங்கலுக்கு சிறப்பு பேருந்து விடுவது தொடர்பாக ஆலோசனை நடந்து வருகிறது.
தமிழகம் முழுவதும் நாளை முதல் பஸ் ஸ்ட்ரைக்
தமிழ்நாடு போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு மற்றும் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு வலியுறுத்தியது. ஆனால் அது குறித்து எந்த நடவடிக்கையும் தமிழக அரசு எடுக்கவில்லை. அதனால் போக்குவரத்து தொழிலார்கள் கடந்த 3 ந் தேதி தாங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
KGF பட ராக் ஸ்டாருக்கு பிறந்த நாள் கொண்டாட்டம்.., அனாமத்தா போன மூன்று உயிர்.., என்ன நடந்தது?
ஆனால் அதை அறிந்த போக்குவரத்து துறை அமைச்சர் S .S .சிவசங்கர் உங்கள் அனைத்து கோரிக்கைகளும் கூடிய விரைவில் நிறைவேற்றப்படும். பொங்கல் விடுமுறைக்கு பின்னர் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இது குறித்த பேச்சுவார்த்தை விரைவில் நடத்தப்படும் என்று கூறி வேண்டுகோள் அறிக்கை ஒன்றை தொழிற்சங்கங்களுக்கு அனுப்பி இருந்தார்.
அதற்கான பேச்சுவார்த்தை இன்று சென்னை தேனாம்பேட்டை T .M S வளாகத்தில் ஒருமணி நேரமாக நடைபெற்றது. தொழிற்சங்க மேலாண்மை இயக்குனர் மற்றும் அதிகாரிகள் தாங்கள் ஏற்கனவே போதுமான காலஅவகாசம் கொடுத்துவிட்டோம். இன்று மாலைக்குள் எங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். இல்லையென்றால் நாளை கண்டிப்பாக வேலை நிறுத்தம் நடைபெறும் என்று கூறினார். ஒருமணி நேரமாக நடைபெற்ற பேச்சுவார்த்தை கடைசியில் தோல்வியில் முடிந்தது.