
இன்றைய காலகட்டத்தில் ஓட்டுநர் உரிமம் இல்லாத இளைஞர்கள் பைக் மற்றும் கார் மீது உள்ள மோகத்தால் வேகமாக ஒட்டி விபத்துக்குள்ளாகி உயிரை மாய்த்து கொள்கின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் வாணியம்பாடி அருகே நடந்த கார் விபத்தில் 19 வயது பள்ளி சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது வாணியம்பாடி அருகில் உள்ள பகுதியில் வகித்து வரும் 10 வகுப்பு மாணவர்கள் 4 பேர் மற்றும் 12ம் வகுப்பு படித்த மாணவர் ஒருவர் விடுமுறை நாட்களை கொண்டாட விரும்பி, இன்று காலை ஏலகிரி மலைக்கு காரில் இன்ப சுற்றுலா சென்றுள்ளனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!

இதனை தொடர்ந்து மலை ஏறி திரும்பி வீட்டிற்கு வந்த கார் எதிர்பாராத விதமாக வளையாம்பட்டு ரயில்வே மேம்பாலத்தில் உள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த காரை அதி வேகமாக ஓட்டி வந்த 12ம் வகுப்பு மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் பயணித்த மற்ற மாணவர்களுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இது குறித்து போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.