வேலூர் மாவட்டத்தில் மே 14ல் உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!வேலூர் மாவட்டத்தில் மே 14ல் உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

வேலூர் மாவட்டத்தில் மே 14ல் உள்ளூர் விடுமுறை: பொதுவாக பிரசித்தி பெற்ற கோவில்களில் திருவிழா வரும் பொழுது மக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது வேலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது,  வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் இருக்கும் கெங்கையம்மன் கோயில் ஒவ்வொரு வருடமும் மக்கள் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த திருவிழாவில் வைகாசி ஒன்றாம் தேதி புகழ்பெற்ற சிரசு திருவிழா நடைபெறும்.

அதன்படி இந்த ஆண்டுக்கான சிரசு ஊர்வலம்  வருகிற மே 14ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று வேலூர் மாவட்டத்திற்கு  உள்ளூர் விடுமுறை நாளாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளார். எனவே அரசு மற்றும் அரசு சார்ந்த கல்வி நிறுவனங்களுக்கு அன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விடுமுறை நாளை ஈடு செய்யும் விதமாக ஜூன் 22(சனிக்கிழமை) அன்று அரசு அலுவலர்களுக்கு வேலை நாளாக அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி  அமைச்சக பணியாளர்களுக்கு வருகிற ஜூன் 23(ஞாயிற்றுக்கிழமை) அன்று பணி நாளாக அறிவித்துள்ளது. எனவே வேலூர் மக்கள் சந்தோஷமாக திருவிழாவை கொண்டாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. வேலூர் மாவட்டத்தில் மே 14ல் உள்ளூர் விடுமுறை

சிவகாசி செங்கமலப்பட்டி பட்டாசு ஆலையில் திடீர் தீ விபத்து  – 7 பேர் உயிரிழப்பு – மீட்கும் பணி தீவிரம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *