
தமிழ் சினிமாவின் செல்ல பிள்ளையாக இருந்து வரும் தளபதி விஜய் தற்போது அரசியலில் குதிக்க போவதாக கடந்த சில மாதங்களாக சோசியல் மீடியாவில் பலரும் பேசி வருகின்றனர். அதற்கு ஏற்றார் போல் விஜய்யின் செயல்களும் இருந்து வருகிறது. சமீபத்தில் நடந்த லியோ சக்ஸஸ் மீட்டில் கூட 2026ல் கப்பு முக்கியம் பிகிலு என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் தனது மக்கள் இயக்கம் மூலமாக மக்களுக்கு தொடர்ந்து பல தொண்டுகளை செய்து வருகிறார்.

இதனை தொடர்ந்து நெல்லை மாவட்டம் வெள்ளத்தில் சிக்கி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தளபதி விஜய் நெல்லையில் உள்ள கே.டி.சி நகரில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நிவாரண பொருட்களை வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது முதல்வர் நிவாரண நிதி வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.