அப்பாட.., ஒருவழியா சிங்கிள் விரதத்தை விஷால் முடிச்சுட்டாருப்பா? விரைவில் அந்த நடிகையுடன் கெட்டிமேளம் தான்!!
தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் விஷால். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான மார்க் ஆன்டனி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அவருடைய சினிமா கேரியரில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை மார்க் ஆன்டனி படம் இடம்பிடித்துள்ளது. தற்போது இவர் ஹரி இயக்கத்தில் ரத்னம் என்ற படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.
இப்படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விஷாலின் திருமணம் குறித்து இப்பொழுது சோசியல் மீடியாவில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இதற்கு முன்னர் ஒரு தொழிலதிபரின் மகளோடு விஷாலுக்கு நிச்சயதார்த்தம் வரை சென்று கல்யாணம் பாதியில் நின்றது நம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
தற்போது விஷால் இவருடன் பூஜை படத்தில் நடித்த நடிகை அபிநயாவை காதலித்து வருகிறாராம். மேலும் இவர்களின் காதலுக்கு இருதரப்பு வீட்டார் சம்மதம் தெரிவித்து விட்டதாகவும், விரைவில் இவர்களுக்கு திருமணம் நடைபெற இருப்பதாகவும் சோசியல் மீடியாவில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் இது குறித்து அவர்களிடம் இருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.