Home » செய்திகள் »  Whatsapp New Update 2023 ! இனி ஒரு மொபைலில் இரண்டு வாட்ஸ்அப் கணக்கு பயன்படுத்தலாம் ! 

 Whatsapp New Update 2023 ! இனி ஒரு மொபைலில் இரண்டு வாட்ஸ்அப் கணக்கு பயன்படுத்தலாம் ! 

Whatsapp New Update

  Whatsapp New Update 2023. ஒரு Android மொபைல் போன்களில் இரண்டு வாட்ஸ்அப் கணக்குகளை பயன்படுத்தலாம் என்று மெட்டா நிறுவனம் அறிவித்து உள்ளது.

 Whatsapp New Update 2023 ! இனி ஒரு மொபைலில் இரண்டு வாட்ஸ்அப் கணக்கு பயன்படுத்தலாம் ! 

Whatsapp New Update 2023

மெட்டா அறிவிப்பு :

  தற்போது இருக்கும் சேட்டிங் செயலிகளில் பாதுகாப்பானதும் பயன்படுத்துவதற்கு எளிமையாக இருப்பதும் வாட்ஸ்அப் தான். மெட்டா நிறுவனம் பயனர்களுக்கு புது புது அப்டேட்களை கொடுத்து வருகின்றது. தற்போது தான் வாட்ஸ்அப் சேனல் பயன்படுத்தும் முறையை அறிமுகம் செய்தது. அதனை தொடர்ந்து பயனர்களின் பல நாள் கோரிக்கையை செயல்படுத்த இருப்பதாக மெட்டா நிறுவனம் அறிவித்து உள்ளது.

JOIN WHATSAPP CHANNEL

வாட்ஸ்அப் பயனர்களின் கோரிக்கை :

  உலகில் பெரும்பாலானோர்கள் ஒரே மொபைலில் இரண்டு வாட்ஸ்அப் கணக்குகளை பயன்படுத்தி வருகின்றனர். ஒரு கணக்கில் இருந்து மற்றொரு கணக்கிற்கு சென்று பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால் இரண்டு மொபைல்கள் பயன்படுத்த வேண்டும். இன்ஸ்ட்ராகிராம் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களை போன்று Add Account போன்ற பயன்பாடு வாட்ஸ்அப் செயலியில் இருக்கலாம் என்று பயனர்கள் கோரிக்கை வைத்து இருந்தனர்.

வாட்ஸ்அப் புதிய அப்டேட் :

  பயனர்களின் கோரிக்கையை மெட்டா நிறுவனம் ஏற்று புதிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. ஒரே Android  போன்களில் இரண்டு நம்பர்கள் Login செய்து வாட்ஸ்அப் பயன்படுத்தும் புதிய நடைமுறையை கொண்டு வந்துள்ளது மெட்டா நிறுவனம்.

முக்கிய குறிப்பு :

  வாட்ஸ்அப் நிறுவனத்தின் புதிய அப்டேட்களை நாம் பயன்படுத்த வேண்டும் என்றால் ஒரு மொபைலில் இரண்டு சிம்கள் கட்டாயம் இருக்க வேண்டும். இந்த இரண்டு சிம்களும் பயன்பாட்டில் இருந்தால் மட்டுமே ஒரே மொபைலில் இரண்டு வாட்ஸ்அப் கணக்குகளை Login செய்து பயன்படுத்த முடியும் என்று மெட்டா நிறுவனம் கூறியுள்ளது. 

பயன்படுத்துவது எப்படி :

1. முதலில் வாட்ஸ்அப் ஓபன் செய்ய வேண்டும்.

2. மொபைலின் வலது புறத்தில் இருக்கும் மூன்று புள்ளிகளை கிளிக் செய்ய வேண்டும் .

3. Setting கிளிக் செய்ய வேண்டும். 

4. Profile கீழே Drop Down என்று இருக்கும். அதனை கிளிக் செய்ய வேண்டும். 

5. நீங்கள் இணைக்க இருக்கும் புதிய மொபைல் நம்பரை பதிவு செய்ய வேண்டும். 

6. உங்கள் மொபைலுக்கு OTP வரும். 

7. OTP வெரிஃபிகேஷன் முடிந்த பின் ஒரே மொபைலில் இரண்டு வாட்ஸ்அப் கணக்குகளை பயன்படுத்த முடியும். 

மெட்டா நிறுவனம் சார்பில் வாட்ஸ்அப் செயலியில் வரும் இந்த அப்டேட் Android மொபைல் போன் பயனாளர்களுக்கு அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.  

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top