பெண்களின் மாதவிடாய் நேரத்தில் ஏன் ஒதுக்கி வைக்கப்பட்டார்கள்? இது தான் உண்மையான காரணம்?பெண்களின் மாதவிடாய் நேரத்தில் ஏன் ஒதுக்கி வைக்கப்பட்டார்கள்? இது தான் உண்மையான காரணம்?

உலகில் உள்ள பெண்களின் மாதவிடாய் நேரத்தில் ஏன் ஒதுக்கி வைக்கப்பட்டார்கள்? தற்போதைய காலகட்டத்தில் பெண்கள் எல்லா துறைகளிலும் தங்களது திறமைகளை வெளிக்காட்டி வருகின்றனர். பெண்கள் அடிமையாக சமையல் அறைக்குள் இருந்த காலம் மாறி தற்போது பெண்கள் பல விதத்தில் சாதனை படைத்து வருகிறார். ஆனால் இப்பொழுது கூட சில விதத்தில் பெண்கள் தள்ளி வைக்கப்படுகின்றன. குறிப்பாக மாதவிடாய் வரும் பொழுது அவர்களது வீட்டில் இருந்தே பெண்கள் தள்ளி வைக்கப்படுவது வழக்கம்.

அதுமட்டுமின்றி பெண்களை  பூஜை பொருட்களை தொடக்கூடாது என்றும், வீட்டின் சமையல் அறைக்குள் செல்ல கூடாது என்றும் முன்னோர் காலத்தில் இருந்து இப்பொழுது வரை கூறப்படுகிறது. ஆனால் மாதவிடாய் காலத்தில் பெண்கள் ஒதுக்கி வைக்கப்பட்டதன்  அறிவியல் ரீதியான காரணங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். பொதுவாக பெண்கள் மற்ற நாட்களை விட மாதவிடாய் நாட்களில் அவர்களின் உடல் மிகவும் உஷ்ணமாக இருப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியும் மிகவும் குறைவாக காணப்படும்.

மேலும் இந்த சமயத்தில் அவர்களது உடலில் வெப்பம் அதிகமாக இருக்கும். அதனால் அவர்கள் தொட்ட பொருள் உடனே பழுதடைய கூடும். அதுமட்டுமின்றி பழங்கள் காய்கறிகளை தொட்டால் அது கெட்டுபோகும் என்பதற்காக தான் நம் முன்னோர்கள் மாதவிடாய் காலத்தில் சமையல் அறைக்குள் பெண்களை விடவில்லை. மேலும் அப்போது பெண்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்பதால் ஈசியாக மற்றவர்களிடம் இருந்து நோய் பரவ வாய்ப்பு இருப்பதால் தனியாக இருப்பதே சிறந்தது.

அதுமட்டுமின்றி முந்தைய காலத்தில் மாதவிடாய் இரத்த கசிவின் போது அதை கட்டுப்படுத்த போதிய ஆடை வசதி கூட இல்லை. அவர்கள் புடவையின் துணியையே பயன்படுத்தி வந்தனர். மேலும் கோவில் உள்ளிட்ட பொது இடங்களுக்கு போக கூடாது என்று கூறினார்கள்.  அறிவியல் ரீதியில் மாதவிடாய் நாட்களில் நமது உடலில் உள்ள சக்கரங்கள் எல்லாம் கீழ் நோக்கி செயல்படும் என்பதால் அதிகமான ரத்தப்போக்கு ஏற்படும் என்பதால் தான் வெளியே செல்ல கூடாது என்று முன்னோர்கள் கூறியுள்ளதாக  நாட்டுப்புற பாடகி அனிதா குப்புசாமி தெரிவித்துள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *