தர்மபுரி முட்டை வியாபாரிக்கு 1900 கோடி வரி ! மகளிர் உரிமைத்தொகை நிராகரிப்பால் வந்த சோதனை !

  தர்மபுரி முட்டை வியாபாரிக்கு 1900 கோடி வரி 7ரூபாய்க்கே வழி இல்ல இதுல 7 கோடி பிஸ்னஸ். ஓசூர் பகுதியில் முட்டை வியாபாரம் செய்யும் நபருக்கு GST மட்டும் 1000 கோடிக்கு மேல் கட்ட வேண்டும் என்று நோட்டீஸ் வந்துள்ளது. இவ்வாறான மோசடி சம்பவம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பம் நிராகரிப்பால் தெரிய வந்துள்ளது. 

தர்மபுரி முட்டை வியாபாரிக்கு 1900 கோடி வரி ! மகளிர் உரிமைத்தொகை நிராகரிப்பால் வந்த சோதனை !

தர்மபுரி முட்டை வியாபாரிக்கு 1900 கோடி வரி

முட்டை வியாபாரம் :

   தர்மபுரி மாவட்டத்தில் பண்டஅள்ளி என்னும் கிராமத்தினை சேர்ந்தவர் ராஜா நடராஜன். இவர் ஓசூர் பகுதியில் இருக்கும் உழவர் சந்தையில் முட்டை வியாபாரம் செய்து வருகின்றார். எனவே ஓசூரின் தேர்ப்பேட்டை என்னும் இடத்தில் குடும்பத்துடன் வசித்து வருகின்றார். 

JOIN WHATSAPPCLICK HERE

   50 வயதான இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் கடந்த ஆண்டு ரூ. 6,902 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்து இருக்கின்றார். எனவே GST ரூ. 1,932 கோடி கட்ட வேண்டும் என்று வரித்துறையில் இருந்து நோட்டீஸ் ஒன்று வந்துள்ளது. தவறான முகவரிக்கு கடிதம் வந்திருக்கும் என்று நினைத்து விசாரிக்கவும் செய்துள்ளார்.

தவறான முகவரி :

   நோட்டீஸ் வந்ததன் பெயரில் அதில் இடம் பெற்று இருக்கும் முகவரிக்கு சென்று விசாரணை செய்துள்ளார். அந்த இடத்தில் எந்த ஒரு நிறுவனமும் இல்லை. அங்கு வீடுகள் மட்டுமே இருந்துள்ளது. தவறான முகவரிக்கு நோட்டீஸ் வந்துள்ளது என்று கருதி அப்படியே விட்டுவிட்டார் ராஜா நடராஜன்.  

விண்ணப்பம் நிராகரிப்பு :

   திமுக ஆட்சியில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு மனைவி பெயரில் ராஜா நடராஜன் விண்ணப்பித்து உள்ளார். இறுதியில் இவர் மனையின் பெயர் நிராகரிக்கப்பட்டு உள்ளது. விண்ணப்பம் ஏன் நிராகரிக்கப்பட்டு உள்ளது என்ற காரணத்தினை பார்த்த போது அதிர்ச்சியடைந்தார். ” ஆண்டுக்கு 50 லட்சம் விற்பனை செய்து வரி செலுத்தும் தொழில் நிறுவனத்தின் உரிமையாளர் என்பதால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு உள்ளது ” என்று காரணம் வந்துள்ளது. 

இந்த மாவட்டத்தில் எல்லாம் நாளை மின்தடை ! உங்க ஏரியா கூட இருக்கலாம் !

மோசடி சம்பவம் :

   முட்டை வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தி வரும் தன் பெயரில் எப்படி இவ்வளவு பணம் என்ற குழப்பத்திற்கு ஆளானார் ராஜா நடராஜன். இறுதியில் சில மாதங்களுக்கு முன் வந்த நோட்டீசை வரித்துறை அலுவலர்களிடம் கொண்டு காண்பித்தார். 

   அதிகாரிகள் விசாரணை செய்ததில் ராஜா நடராஜன் என்னும் இவர் பெயரில் வேறு ஒருவர் டெல்லியில் நிறுவனம் ஒன்றை இயங்கி வருகின்றார். இவர்களே பண மோசடி செய்துள்ளனர் என்று  தற்போது தெரிய வந்துள்ளது. 

மானநஷ்ட வழக்கு :

   தன் பெயர் பயன்படுத்தி பண மோசடி செய்தவர்களை அதிகாரிகள் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராஜா கோரிக்கை வைத்துள்ளார். மேலும் இவர் மன உளைச்சலில் இருப்பதால் நிறுவனத்தின் மீது மானநஷ்ட வழக்கும் தொடர இருக்கின்றார்.

பண மோசடிகள் தற்போது புதுப்புது வடிவங்களில் நிகழ்ந்து வருகின்றது. கவனமாக செயல்படும் போது இது போன்ற மோசடிகள் நிகழ்வதை நாம் தடுக்க முடியும்.  

Leave a Comment