சொத்து வெறி பிடிச்ச உறவினரால் நடந்த அட்டுழியம்.., 6 வருடமாக மூதாட்டியை ஒரே வீட்டில் சிறைபிடித்த கொடுமை.., என்ன நடந்தது?சொத்து வெறி பிடிச்ச உறவினரால் நடந்த அட்டுழியம்.., 6 வருடமாக மூதாட்டியை ஒரே வீட்டில் சிறைபிடித்த கொடுமை.., என்ன நடந்தது?

இன்றைய காலகட்டத்தில் சொத்துக்காக ரத்த சம்பந்தம் என்று கூட பாராமல் கொலை செய்யும் அளவுக்கு சிலர் செல்கின்றனர். அந்த வகையில் சொத்துக்காக 6 ஆண்டுகள் வீட்டுக்குள் பூட்டி ஒரு மூதாட்டியை உறவினர் சிறை வைத்த சம்பவம் அனைவரது மனதையும் காயப்படுத்தியுள்ளது. அதாவது திருவாரூர் மாவட்டம் மேலக்கரை கிராமத்தை சேர்ந்த தம்பதி தான் பழனித்துரை-ஜெயம் (65).

இந்த தம்பதிக்கு குழந்தை பாக்கியம் இல்லை. மேலும் பழனித்துரை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். அதன்பிறகு தனிமையில் வாடி வந்த ஜெயத்துக்கு வீடு மற்றும் சில நிலங்கள் சொத்து இருப்பதாக சொல்லப்படுகிறது. அதை அவரிடம் இருந்து பிடுங்குவதற்காக உறவினர் ஒருவர், அந்த மூதாட்டியை அவரது வீட்டுக்குள் சிறை பிடித்து 6 வருடங்களாக ஒரு வேலை உணவு மட்டும் ஜன்னல் வழியாக கொடுத்து வந்துள்ளார்.

மூதாட்டியை ஒரே வீட்டில் சிறைபிடித்த கொடுமை

இப்படி ஒன்று இங்கு நடப்பதை அக்கம்பக்கத்தினர் கவனிக்காமல் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் ஒருவர் அந்த மூதாட்டியை வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறையிடம் புகார் கொடுத்துள்ளனர். சம்பந்தப்பட்ட உறவினரை கைது செய்ய போலீஸ் நடவடிக்கை எடுத்து வருகிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *