நடிகை  தமன்னாவுக்கு சம்மன் அனுப்பிய  மும்பை சைபர் கிரைம் – காசுக்கு ஆசைப்பட்டு கேசுல சிக்கிய பரிதாபம்?

நடிகை  தமன்னாவுக்கு சம்மன் அனுப்பிய  மும்பை சைபர் கிரைம்: நடப்பாண்டு ஐபிஎல் போட்டி விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கும் நிலையில். எந்த அணி இம்முறை வெற்றி கோப்பையை தட்டி தூக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. இந்நிலையில் ஐபிஎல் விவகாரமாக நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் அனுப்பியுள்ள சம்பவம் சினிமா துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கடந்த 2023 ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப VIACOM என்ற நிறுவனத்திற்கு தான் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

நடிகை  தமன்னாவுக்கு சம்மன் அனுப்பிய  மும்பை சைபர் கிரைம்

ஆனால் தமன்னா சட்டவிரோதமாக ஐபிஎல் போட்டிகளை ஃபோர்பிளே என்ற செயலி மூலம் ஒளிபரப்பியுள்ளார். இதனால் VIACOM  நிறுவனத்திற்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அந்நிறுவனம் புகார் தெரிவித்துள்ளது. எனவே நடிகை தமன்னாவை ஏப்ரல் 29ம் தேதி அன்று நேரில் ஆஜராகும்படி மும்பை சைபர் கிரைம் சம்மன் அனுப்பியுள்ளது. நடிகை தமன்னா நடித்துள்ள அரண்மனை 4 அடுத்த மாதம் 3ம் தேதி வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. 

கோடை வெயிலில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி? வானிலை மையம் கொடுத்த டிப்ஸ் இதோ!!

Leave a Comment