டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை  சந்திக்கும் மனைவி – அனுமதி வழங்கிய திகார் சிறை!!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை  சந்திக்கும் மனைவி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை, மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சமீபத்தில் அமலாக்கத்துறை கைது செய்து சிறையில் அடைத்தது. இதனை தொடர்ந்து சிறையில் இருந்தபடியே அரசாங்கத்தை வழி நடத்தி வந்த நிலையில், தற்போது வரை ஜாமீன் கிடைக்காமல் நீதிமன்ற காவலில் சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.

மேலும் அவர் சிறையில் இருப்பது குறித்து பல செய்திகள் வெளியாகிய வண்ணம் இருக்கிறது. இந்நிலையில்  இவர் குறித்து ஓர் முக்கிய தகவலை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது. அதாவது, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவாலுக்கு திகார் சிறை அனுமதி வழங்கியுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

ஆனால் அவர் எப்போது போய் சந்திக்க போகிறார் என்பது குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. இதனை தொடர்ந்து அமலாக்கத்துறை  எதிர்க்கட்சி தலைவர்களை தொடர்ந்து கைது செய்து வரும் நிலையில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

நத்திங் போன் 2a புளூ எடிஷன் இந்தியாவில் மே 2 முதல் அறிமுகம் – இதுல என்ன ஸ்பெஷல் இருக்கு தெரியுமா?

Leave a Comment