தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்க போகுது – சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!!

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்க போகுது: தமிழகத்தில் கோடை காலம் ஆரம்பித்ததில் இருந்து வெயில் வாட்டி வதைத்து வருகிறது. எப்போது இல்லாத அளவுக்கு இந்த வருடம்  வெப்பத்தின் தாக்கம் அதிகமாக தான் இருந்து வருகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இது ஒரு பக்கம் இருந்தாலும் ஒரு சில மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகின்றன. நேற்று கூட மதுரை, சென்னை, தேனி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. அந்த வகையில் தற்போது தமிழகத்தில் உள்ள 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், ” தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களான ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை,  கடலூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 7 மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் தொடர்ந்து வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்ப அலை தாக்கம் இருக்கும் என்று தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்க போகுது

விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது கௌரவிப்பு – பிரேமலதா டெல்லி புறப்பாடு – தடபுடலாக ரெடியாகும் நிகழ்ச்சி?

Leave a Comment