சென்னையில் வார இறுதி நாட்களில் 1200 சிறப்பு பஸ்கள் - போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு!!சென்னையில் வார இறுதி நாட்களில் 1200 சிறப்பு பஸ்கள் - போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு!!

சென்னையில் வார இறுதி நாட்களில் 1200 சிறப்பு பஸ்கள்: சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வேலை பார்க்கும் மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று வார விடுமுறையை கொண்டாட நினைப்பார்கள். அவர்களுக்காகவே தமிழக அரசு வார விடுமுறையை யொட்டி சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த வார விடுமுறையில் சிறப்பு பஸ்கள் குறித்து தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனர் ஆர்.மோகன் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், ” வார விடுமுறையை முன்னிட்டு நாளை, மே 11 மற்றும் மே 12ம் தேதி சென்னையில் இருந்து மற்ற ஊர்களுக்கு செல்ல மக்கள் படையெடுப்பார்கள்.

இதை கருத்தில் கொண்டு, சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை, திருநெல்வேலி,  திருச்சி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருவண்ணாமலை, கும்பகோணம்,  நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு நாளை 425 பஸ்களும், அதே போல் 11ம் தேதி 505 பேருந்துகளும் கூடுதலாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்க போகுது – சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!!

அதே போல் சென்னை கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் இருந்து  பெங்களூரு, ஓசூர்,நாகை, வேளாங்கண்ணி ஆகிய இடங்களுக்கு நாளை  மற்றும் நாளை மறுநாள் 55 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே வார விடுமுறையை கொண்டாட 1,200 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிட்டுள்ளது. மேலும் திரும்ப சென்னை, பெங்களூருக்கு வருவதற்கு சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இயக்குனர் ஆர்.மோகன் தெரிவித்துள்ளார். சென்னையில் வார இறுதி நாட்களில் 1200 சிறப்பு பஸ்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *