விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது கௌரவிப்பு - பிரேமலதா டெல்லி புறப்பாடு - தடபுடலாக ரெடியாகும் நிகழ்ச்சி?விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது கௌரவிப்பு - பிரேமலதா டெல்லி புறப்பாடு - தடபுடலாக ரெடியாகும் நிகழ்ச்சி?

விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது கௌரவிப்பு: மறைந்த பிரபல நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவருமான கேப்டன் விஜயகாந்த் தற்போது நம்முடன் இல்லை என்றாலும், நம் மனதில் எப்பொழுது வாழ்ந்து கொண்டு தான் இருப்பார். உயிரோடு இருக்கும் போது ஏழை எளிய மக்களுக்கு வயிறாக சாப்பாடு போட்ட வள்ளல் தற்போது இறந்தும் கூட அவருடைய நினைவிடத்தில் தொடர்ந்து அன்னதானம் நடைபெற்று வருகிறது. அதாவது விஜயகாந்த் நினைவிடத்திற்கு கடந்த மூன்று மாதங்களில் ஒரு லட்சத்துக்கு மேலாக மக்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர். வந்தவர்களுக்கு சாப்பாடும் போடப்பட்டுள்ளது. இதனால் விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மறைந்த விஜயகாந்த் அவர்களுக்கு இன்று மத்திய அரசு பத்ம பூஷன் விருது அளித்து கவுரவிக்க உள்ளது. அதை வாங்குவதற்கு நேற்று டெல்லி தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் டெல்லி புறப்பட்டு சென்றார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ” கேப்டனுக்கு நாளை  மத்திய அரசு பத்ம பூஷன் விருது கொடுத்து கௌரவிக்க இருக்கிறது. அதனை எனது கணவர் சார்பாகவும் என் தலைவர் சார்பாகவும் நான் பெற்று கொள்ள போகிறேன். நாளை மாலை 6.30 மணிக்கு மேல் இந்த விருது நிகழ்ச்சி நடைபெறுகிறது என்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து மே 10ம் தேதி டெல்லி தமிழ் சங்கம் சார்பாக கேப்டனுக்கு பாராட்டு விழா நடக்க இருக்கிறது.  விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது கௌரவிப்பு

கஞ்சா கடத்தல் வழக்கில் சவுக்கு சங்கருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் – அதிரடி உத்தரவு பிறப்பித்த மதுரை நீதிமன்றம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *