எலக்சன் வருது.., சீமானுக்கு எதிரா என்னை யாரும் பகடைகாயா யூஸ் பண்ணீங்க? திடிரென கொந்தளித்த விஜயலக்ஷ்மி!!

நடிகரும் அரசியல் கட்சி தலைவராக இருந்து வரும் சீமான் அவர்கள் தன்னை திருமணம் செய்வதாக கூறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டார் என்று பிரபல நடிகை விஜயலக்ஷ்மி கடந்த 12 வருடங்களாக வழக்கு நடத்தி வருகிறார். ஆனால் தற்போது வரை வழக்கு நீண்டு கொண்டே தான் போகிறது. சமீபத்தில் கூட காவல்துறை தன்னிடம் உள்ள ஆதாரங்களை கைப்பற்றி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டியும், அரசியல் மூலம் சீமான் தன்னை காப்பாற்றி கொள்கிறார் என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

சீமான்  விஜயலக்ஷ்மி
சீமான் விஜயலக்ஷ்மி

இந்நிலையில் திடீரென ஆவேசமாக பேசி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் கடந்த 2011ம் ஆண்டு சீமானை மடக்க என்னை பகடைக்காயாக அஇஅதிமுக பயன்படுத்தியது. அப்போதும் எனக்கு நீதி கிடைக்கவில்லை. இப்பொழுது லோக்சபா தேர்தல் வர இருக்கும் நேரத்தில் சீமானை மடக்க என்னை யாரும் பயன்படுத்த முடியாது? யாரும் வந்துராதீங்க? இனி நீதி கேட்டு தமிழகத்தில் யார் கிட்ட போயும் நிக்க மாட்டேன் என்று கொந்தளித்து பேசியுள்ளார். 

Leave a Comment