ஏய்.., எப்புட்றா.., நெட்பிளிக்ஸில் வெளியாகும் "விடா முயற்சி" திரைப்படம்., வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!ஏய்.., எப்புட்றா.., நெட்பிளிக்ஸில் வெளியாகும் "விடா முயற்சி" திரைப்படம்., வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக இருந்து வரும் நடிகர் தான் அஜித் குமார். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது தடையறத் தாக்க, கலகத் தலைவன் உள்ளிட்ட த்ரில்லர் ஆக்சன் படங்களை இயக்கிய மகிழ் திருமேனி படைப்பில் உருவாகி வரும் “விடாமுயற்சி” படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருடன் இணைந்து அர்ஜுன், திரிஷா நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் ஷூட்டிங் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், கடந்த ஆண்டு அஜித் பிறந்தநாள் அன்று முதல் போஸ்டரை வெளியீட்டு இருந்தது. அதன் பிறகு படத்தை குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகாமல் இருந்து வருகிறது. இந்நிலையில் “விடாமுயற்சி” படத்தை குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது  அஜித்குமார் நடித்து வரும் “விடாமுயற்சி” படம் இந்த ஆண்டுக்குள் நெட் பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதை அறிந்த ரசிகர்கள் முதலில் படத்தோட ரிலீஸ் தேதி எப்போது என்று கேட்டு வருகின்றனர். இதை தொடர்ந்து “மார்க் ஆண்டனி” படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் படைப்பில் உருவாக இருக்கும் AK63 படத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

“இறுகப்பற்று” பட நடிகை சானியா ஐயப்பன் அப்பா அம்மாவை பார்த்துள்ளீர்களா? அழகிய குடும்ப புகைப்படம் உள்ளே!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *