அன்னபூரணி திரை விமர்சனம்அன்னபூரணி திரை விமர்சனம்

அன்னபூரணி திரை விமர்சனம். நயன்தாரா நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ள திரைப்படம் அன்னபூரணி. வீட்டில் உள்ளவர்களின் எதிர்ப்பை மீறி சமையலில் நிபுணராக மாறும் நயன்தாரா. இதை பற்றிய விமர்சனம் மற்றும் ரசிகர்களின் கருத்து என்ன என்பதை காணலாம்.

அன்னபூரணி திரை விமர்சனம்

நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் , நயன்தாரா , ஜெய் , சத்தியராஜ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் மேலும் கே எஸ் ரவிக்குமார் ,ரெடின் கிங்ஸ்லி ,ரேணுகா ,சுரேஷ் சக்கரவர்த்தி , குமாரி சச்சு ஆகியோர் இக்கதைக்கு வலு சேர்த்துள்ளனர்.

அசைவ உணவுகளை விரும்பாத பிராமண குடும்ப பெண்ணாக நயன்தாரா நடித்திருக்கிறார். சிறந்த சமையல் கலைஞராக வர வேண்டும் என்பது லட்சியமாக இருக்கிறது . தன் குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி தனது லட்சியத்தை அடைந்தாரா இல்லையா, இதனால் ஏற்படும் சிக்கல்களை எப்படி சமாளித்தார் என்பது தான் அன்னபூரணி கதை களம்.

மீண்டும் மருதநாயகம் ! ஆனால் கமல்ஹாசன் நடிக்கவில்லை  1000 கோடி பட்ஜெட்டில் உருவாகிறது ! 

திருச்சி ஒரு பிராமண குடும்ப பெண்ணாக நயன்தாரா நடித்திருக்கிறார் . அவரது தந்தை மடப்பள்ளியில் உணவு சமைப்பவர் . அன்னபூர்ணிக்கு சிறுவயதில் இருந்து உணவின் ருசி அறியும் திறன் அதிகமாக இருந்துள்ளது . அதனால் சமைப்பதில் அவ்வளவு ஆர்வம் .அவரது தந்தைக்கு அசைவம் பிடிக்காது என்பதால் அவருக்கு தெரியாமல் சமையல் கலை நிபுணராக கல்வி பயில்கிறார் . இதன் மூலம் ஏற்படும் குழப்பங்களை எப்படி சமாளிக்கிறார் என்று கதை நகர்ந்து செல்கின்றது.

JOIN WHATSAPP CHANNEL

மேலும் ஜெய் தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். திரைக்கதை சைவ விரும்பிகள் & அசைவ விரும்பிகள் என எடுத்து செல்லப்படுகிறது . அன்னபூரணி தனக்கு பிடித்த சமையல் துறையில் எப்படி சாதித்தார் என்பது கதையின் மைய கருத்தாக எடுத்து செல்லப்படுகிறது. படத்தில் பாடல் காட்சிகள் இடம் பெற்றிருந்தாலும் பின்னணி இசை அவ்வளவாக வலுசேர்க்கவில்லை .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *