மீண்டும் மருதநாயகம் ஆனால் கமல்ஹாசன்மீண்டும் மருதநாயகம் ஆனால் கமல்ஹாசன்

  மீண்டும் மருதநாயகம். ஆனால் கமல்ஹாசன் நடிக்கவில்லை. 1,000 கோடி பட்ஜெட் மருதநாயகம். 1997ல் கமல் நடித்த மருதநாயகம் திரைப்படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது. மேலும் விக்ரம் அல்லது சூர்யா இத்திரைப்படத்தில் நடிக்க பரிந்துரை செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மீண்டும் மருதநாயகம் ! ஆனால் கமல்ஹாசன் நடிக்கவில்லை  1000 கோடி பட்ஜெட்டில் உருவாகிறது ! 

மீண்டும் மருதநாயகம் ! ஆனால் கமல்ஹாசன் நடிக்கவில்லை 

1997ல் மருதநாயகம் :

  1997ம் ஆண்டுகளில் நடிகர் கமல்ஹாசன் நடித்து , தயாரித்து , இயக்கிய திரைப்படம் மருதநாயகம். கமலுடன் நாசர் , பசுபதி மற்றும் சத்தியராஜ் போன்றோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தனர். இளையராஜா இசை அமைக்க இருந்தார். இங்கிலாந்து அரசி இரண்டாம் எலிசபெத் மருதநாயகம் திரைப்பட தொடக்க விழாவில் கலந்து கொண்டார். உலகே வியக்கும் படி தொடங்கப்பட்ட மருதநாயகம் திரைப்படம் நிதி நெருக்கடியால் கைவிடப்பட்டது. வெளிநாட்டு தயாரிப்பாளர்கள் இத்திரைப்படத்தினை தயாரித்தால் மருதநாயகம் வெளியாகும் என்று அப்போது சொல்லப்பட்டது.

JOIN WHATSAPP CHANNEL

கமலின் கனவு & மருதநாயகம் :

  நான் திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என்று சில ஆண்டுகளுக்கு முன் கமல் கூறினார். விக்ரம் திரைப்படம் வசூல் சாதனை செய்தது. இந்தியன் 2 , மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படம் போன்ற அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகின்றார். தற்போது கமலின் 30 ஆண்டுகள் கனவு திரைப்படமான மருதநாயகம் திரைப்படத்தினை எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

லைக்கா நிறுவனம் & மருதநாயகம் :

  வெளிநாட்டு தயாரிப்பாளர்கள் தயாரிப்பு செய்தால் திரைப்படம் வெளியாகும் என்று இருந்த நிலையில் தற்போது மருதநாயகம் திரைப்படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது. சுமார் ( 1,000 ) ஆயிரம் கோடி பட்ஜெட்  தயாரிப்பில் மருதநாயகம் படம் எடுக்க இருப்பதாக திரைத்துறையில் பேசப்படுகின்றது.

Leo Public Review Tamil ! Loki என்ன பண்ணி வச்சுருக்கீங்க ! முழு விமர்சனம் !

இயக்குனர் – கமல்ஹாசன் :

  மருதநாயகம் பட ப்ரோமோவில் கமல்ஹாசன் மருதநாயகம் கதாப்பாத்திரத்தில் நடித்தார். ஆனால் தற்போது கமல் இயக்குனராக மட்டுமே இருக்க போகின்றாராம். மருதநாயகம் கதாப்பாத்திரத்தில் நடிக்க விக்ரம் மற்றும் சூர்யா பரிசீலனையில் இருக்கின்றனர். இதில் யார் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார்களோ அவர்களே நடிப்பர் என்று தகவல் வெளியாகி உள்ளது. மீண்டும் மருதநாயகம். ஆனால் கமல்ஹாசன் நடிக்கவில்லை.

இந்தியன்2 , H.வினோத் இயக்கும் திரைப்படம் , மணிரத்னம் இயக்கும் திரைப்படம் இவைகளின் பின் கமல் மருதநாயகம் திரைப்படம் ஆரம்பிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மருதநாயகம் திரைப்படம் உலகளவில் எதிர்பார்க்கப்படும் திரைப்படம். கமலின் கனவு திரைப்படம் தற்போது மக்களின் கனவு திரைப்படமாக மாறிவிட்டது.  

By Nivetha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *