Leo Public Review TamilLeo Public Review Tamil

  Leo Public Review Tamil. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியாகி இருக்கும் திரைப்படம் லியோ. தியேட்டர் போலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருக்கும் மக்கள் உங்களுக்காக லியோ படத்தினை பார்த்த மக்கள் கூறும் கருத்துக்களை பார்க்கலாம்.

Leo Public Review Tamil

அதிகாலை காட்சி ரத்து :

  லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் இரண்டாவது திரைப்படம் லியோ. இதில் திரிஷா , அர்ஜுன் , சஞ்சய் தத் , பிரியா ஆனந்த் , சாண்டி , மிஸ்கின் , கவுதம் மேனன் போன்ற பல திரை பிரபலங்கள் நடித்து உள்ளனர். அனிருத் திரைப்படத்திற்கு இசை அமைத்து இருக்கின்றார். திரைப்பட தயாரிப்பளார் லலித் குமார் லியோ திரைப்படத்தினை இயக்கி இருக்கின்றார். லியோ தமிழகத்தில் அதிகாலை 4மணி காட்சி திரையிட ரத்து செய்யப்பட்டு உள்ளது. ஆனால் கேரளா போன்ற பிற பகுதிகளில் அதிகாலையில் திரைப்படம் வெளியாகி உள்ளது.

JOIN WHATSAPP CHANNEL

யார் இந்த லியோ :

  விஜய் ( பார்த்திபன் ) தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்து வருகின்றார். ஒரு பக்கம் காபி ஷாப் மற்றொரு பக்கம் விலங்குகளை காப்பாற்றுவது. தன் குழந்தைக்கு ஆபத்து வர எதிரிகளை துப்பாக்கி கொண்டு சுட்டு தள்ளுகின்றார். எதிரிகளுக்கு இவர் லியோவாக இருக்குமோ என்ற சந்தேகம் வருகின்றது. இவர் லியோ தானா இல்லை உண்மையில் இவர் பார்த்திபன் தானா என்பதே திரைப்படத்தின் இறுதி கதை.

மக்கள் கருத்து :

  1. லியோ முழுக்க முழுக்க லோகேஷ் கனகராஜ் படம் தான்.

  2. அர்ஜுன் , தளபதி சண்டை காட்சிகள் வெறித்தனமாக இருக்கின்றது.

  3. லியோல இருக்குறது வேற ஒரு தளபதி.

  4. லியோவில் ஒவ்வரு சீனும் லோகேஷ் தளபதிக்காக செதுக்கி வைத்து இருக்கின்றார். 

  5. ஆயிரம் கோடி வசூல் செய்யும் லியோ.

  6. எதிர்பார்த்ததை விட 100 மடங்கு அதிகமாக இருக்கின்றது.

  7. விக்ரம் திரைப்படத்தை தூக்கி சாப்பிட்டு விட்டது. 

தலைவர் 170 ! 46 ஆண்டுகளுக்கு பிறகு நெல்லை வந்த ரஜினிகாந்த் ! 

  8. ரொம்ப நாளுக்கு அப்பறம் தளபதி வில்லன் மாறி இருக்காரு. தரமா இருக்கு.

  9. தமிழ் சினிமாவில் லியோ தன் முதல் இடத்தில் இருக்கும்.

10. கண்ணை சிமிட்ட முடியாத அளவில் இருக்குது ஒவ்வரு சீனும்.

11. முதல் 10 நிமிடம் மிஸ் பண்ணவே கூடாது.

12. இடைவெளி காட்சிகள் சும்மா பயங்கரமா இருக்கு.

13. முதல் பாதி செம்ம என்டர்டென்மெண்ட். இரண்டாம் பாதி பிரம்மாண்டம். 

14. இங்கிலிஷ் படம் மாறி இருக்கு.

15. விஜய் ரசிகர்கள் தாண்டி அனைத்து நடிகர் ரசிகர்களும் விரும்பும் படமாக இருக்கும். 

பின்ன என்ன மக்கள் கருத்து பத்தாச்சு தியேட்டர் போலாம் குடும்பத்துடன் லியோ பாக்கலாம். 

By Nivetha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *