முடிவுக்கு வரும் பாண்டவர் இல்லம் சீரியல்முடிவுக்கு வரும் பாண்டவர் இல்லம் சீரியல்

  முடிவுக்கு வரும் பாண்டவர் இல்லம் சீரியல். சன் டிவியில் மதிய நேரத்தில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டவர் இல்லம். இந்த சீரியல் ஆயிரம் எபிசோடுகளை கடந்த நிலையில் சீரியலின் கிளைமாக்ஸ் ஷூட்டிங் இன்று முடிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முடிவுக்கு வரும் பாண்டவர் இல்லம் சீரியல் ! ஷூட்டிங் முடிந்தது ! 

முடிவுக்கு வரும் பாண்டவர் இல்லம் சீரியல்

சீரியல் & சன் டிவி :

  சீரியல்கள் என்று மக்களை கவர்ந்த முதல் டிவி சன் தொலைக்காட்சி தான். தற்போது மக்களிடம் எதிர்பார்ப்புகள் அதிகரித்த நிலையில் வாரத்தின் அனைத்து நாட்களிலும் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றது. பரபரப்புகளுக்கு பஞ்சம் இல்லாமல் இரவு நேர ஒளிபரப்பு சீரியலில் எதிர்நீச்சல் TRPல் முதல் இடத்தில் இருக்கின்றது. ஆனால் மதிய நேரத்தில் ஒளிபரப்பு செய்யப்படும் சீரியல்களில் பாண்டவர் இல்லம் தான் முதல் இடத்தில் இருக்கின்றது.

JOIN WHATSAPP CHANNEL

பாண்டவர் இல்லம் :

  2019ம் ஆண்டு தொடங்கப்பட்ட பாண்டவர் இல்லம் தற்போது இறுதி கட்டத்தினை நெருங்கி உள்ளது. இந்த சீரியல் இரண்டு குடும்பங்களின் கதையை மையப்படுத்தி கதை நகர்ந்தாலும் அண்ணன் தம்பி பாசத்தினை வெளிக்காட்டும் படியாக சீரியல் இருக்கின்றது. மதிய நேர சீரியல்களில் பாண்டவர் இல்லம் சீரியல்களுக்கு ரசிகர்கள் அதிகம். இந்த சீரியல் 1200க்கும் அதிகமான எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றது.

கிளைமாக்ஸ் ஷூட்டிங் முடிந்தது :

  நேர மாற்றங்கள் இருந்தாலும் சீரியலில் பரபரப்பான கதை மக்களை ரசிக்க வைத்தது. இந்நிலையில் இந்த சீரியலின் கிளைமாக்ஸ் ஷூட்டிங் நிறைவடைந்து இருக்கின்றது. விறுவிறுப்பான கதையுடன் நகரும் பாண்டவர் இல்லம் அடுத்த வரத்துடன் முடிய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Bigg Boss 7 Tamil ! இந்த வாரம் எலிமினேஷன் கிடையாது ! உறுதியானது தகவல் !

நியூ சீரியல் :

  ஒரு சீரியல் முடிய இருக்கின்றது என்றால் மற்றொரு புதிய சீரியல் ப்ரோமோ மற்றும் நேரம் வெளியாவது வழக்கம். ஆனால் பாண்டவர் இல்லம் சீரியல் இறுதி கட்டத்தினை நோக்கி இருந்தாலும் புதிய சீரியல் ப்ரோமோ தற்போது வரையில் வெளியாகாமல் இருக்கின்றது. ஆனால் இறைவி மற்றும் பூவா தலையா மதிய நேரத்தில் ஒளிபரப்பாக தயாராக இருக்கின்றது. சன் டிவியில் சீரியலில் சில நேர மாற்றங்கள் செய்த பின் புதிய சீரியல் ப்ரோமோ வெளியாவதற்க்கு வாய்ப்புகள் இருக்கின்றது என்று தகவல் வெளியாகி உள்ளது. 

சீரியலில் மக்கள் மனம் கவர்ந்த ரோகிணி சீரியலில் இருந்து விலகிய பின்னர் சீரியல்களை பெரும்பாலான மக்கள் பார்ப்பதில்லை. இவையும் சீரியலை முடிப்பதற்க்கு காரணமாக இருக்கலாம் என்று பேசப்படுகின்றது.   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *