thalapathy 68 castthalapathy 68 cast

  thalapathy 68 cast தளபதி 68ல் இணைந்த எதிர்நீச்சல் சீரியல் நடிகை. நடிகர் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். பல பிரபலங்கள் நடிக்கும் இத்திரைப்படத்தில் அஜித்தின் வரலாறு திரைப்பட கதாநாயகி கனிகா தளபதி 68 திரைப்படத்தில் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்ப்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

thalapathy 68 cast ! தளபதி 68 ல் இணைந்த எதிர்நீச்சல் சீரியல்  நடிகை ! 

thalapathy 68 cast

தளபதி 68 & பூஜை வீடியோ :

  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் லியோ. விஜய் , அர்ஜுன் , திரிஷா போன்ற பல திரை பிரபலங்கள் நடித்த இத்திரைப்படமானது வெளியாகி வசூல் செய்து வருகின்றது. இந்நிலையில் நடிகர் விஜயின் அடுத்த திரைப்படம் குறித்த அப்டேட் எப்போது என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு தளபதி 68 திரைப்படத்தின் பூஜை வீடியோ வெளியாகியது.

JOIN SKSPREAD WHATSAPP CHANNEL

தளபதி 68 & படக்குழு :

  இயக்குனர் வெங்கட் பிரபு தளபதி 68 திரைப்படத்தினை இயக்குகின்றார். விஜய் கதாநாயகனாக நடிக்கின்றார். மேலும் திரைப்படத்தில் சினேகா , லைலா , மீனாட்சி , யோகி பாபு , பிரபு தேவா , பிரசாந்த் , வி.டிவி.கணேஷ் , மைக் மோகன் , பிரேம் ஜி , ஜெயராம் , வைபோ போன்ற பல பிரபலங்கள் நடிக்கின்றார். இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து வருகின்றார். Thalapathi 68 Update

டைம் டிராவல் கதை :

  தளபதி 68 திரைப்படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்க இருக்கின்றார். ஒன்று இளமையான கதாபாத்திரம். மற்றொன்று வயதான விஜய் கதாப்பாத்திரம். வெங்கட் பிரபுவின் மாநாடு திரைப்படத்தின் மூலம் டைம் லூப் கதை அமைந்திருக்கும். இந்த படத்தில் டைம் டிராவல் சார்ந்த கதையை இயக்கி வருகின்றார் என்று தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டுகளில் வெளியான நேற்று இன்று நாளை திரைப்படம் மக்களிடம் அதிகளவில் ரசிக்கப்பட்டது. அதே போல் விஜய் போன்ற பெரிய நடிகர்கள் நடிக்கும் திரைப்படமாக இருப்பதால் கட்டாயம் இப்படம் நன்றாக அமையும். 

KH 234 Update ! கமல் பிறந்த நாளில் வெளியாகின்றது KH 234 படத்தின் ப்ரோமோ !

அஜித் பட நடிகை :

  தளபதி 68 திரைப்படத்தில் பூஜை விடியோவில் இல்லாத நடிகை தற்போது திரைப்படத்தில் இணைந்து இருக்கின்றார். அஜித்தின் வரலாறு படத்தில் நடித்த நடிகை கனிகா தளபதி 68 படத்தில் நடிக்க இருக்கின்றார் என்று திரைத்துறையில் பேசப்படுகின்றது. இவர் சில திரைப்படங்களில் நடித்தார். பின்னர் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் சீரியல்களில் மட்டுமே நடித்து வந்தார். இவரும் தற்போது இணைந்திருக்கும் தகவல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது. Thalapathi 68 Update

மைக் மோகன் மனைவி கதாப்பாத்திரம் :

  தளபதி 68 திரைப்படத்தில் மைக் மோகன் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்க இருக்கின்றார். இவருக்கு ஜோடியாக அதாவது மைக் மோகன் மனைவி கதாப்பாத்திரத்தில் நடிகை கனிகா நடிக்க இருக்கின்றார் என்று தகவல் வெளியாகி உள்ளது. நீண்ட இடைவெளிக்கு அப்புறம் விஜய் திரைப்படத்தில் நடிக்க இருப்பதால் அடுத்தடுத்து சினிமாவில் நடிக்க இருக்க வாய்ப்புகள் இருக்கின்றது.

தளபதி 68 படம் வெங்கட் பிரபு இயக்குவதில் வித்தியாசமான திரைப்படம். மேலும் விஜய் நடிக்கும் முதல் டைம் டிராவல் கதை என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு திரையில் வெளியாக வாய்ப்புகள் இருக்கின்றது. Thalapathi 68 Update

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *