தீபாவளி ரிலீஸ் தமிழ் மூவிஸ் 2023தீபாவளி ரிலீஸ் தமிழ் மூவிஸ் 2023

  தீபாவளி ரிலீஸ் தமிழ் மூவிஸ் 2023. திரைப்படங்கள் தியேட்டர் மற்றும் OTTகளில் வார இறுதி நாட்களில் வெளியாகும். அதன்படி தீபாவளி பண்டிகையை ஒட்டி தியேட்டர் மற்றும் OTTகளில் வெளியாக இருக்கும் தமிழ் மொழி திரைப்படங்களை காணலாம். 

தீபாவளி ரிலீஸ் தமிழ் மூவிஸ் 2023

  இந்த வாரம் ஞாயிற்றுக் கிழமை தீபாவளி பண்டிகையை மக்கள் கொண்டாட உள்ளனர். தீபாவளி பண்டிகையை மக்கள் கொண்டாட சிறப்பு விடுமுறையும் அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் வீடுகளில் மட்டும் தீபாவளி பண்டிகையை கொண்டாடாமல் பல சுற்றுலாத்தலங்களுக்கும் செல்வர். 

JOIN WHATSAPP CHANNEL

  அதிலும் சிறப்பாக சினிமா பார்த்து தீபாவளி பண்டிகையை கொண்டாடும் கூட்டமும் இருக்கின்றது. அவர்களுக்கு என்று இந்த வார இறுதியில் பல திரைப்படங்கள் தியேட்டர் மற்றும் OTTகளில் வெளியாக இருக்கின்றது.  

  1. ஜப்பான் 

  2. ஜிகர் தாண்டா டபுள் x

  3. ரெய்டு 

  4. கிடா 

  நடிகர் கார்த்தி நடிப்பில் 25வது திரைப்படமாக வருகின்ற 10ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. ஜி.வி. பிரகாஷ் இசையில் இப்படம் வெளியாக உள்ளது. திரைப்படத்தில் பவா செல்லதுரை , கே.எஸ்.ரவிக்குமார் , சுனில் போன்ற முக்கிய பிரபலங்கள் நடித்து உள்ளனர். ராஜ் முருகன் இயக்கத்தில் உருவான இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையில் வெளியாக இருக்கின்றது.

  ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் ஜிகர் தாண்டா டபுள் x திரைப்படம் வரும் நவம்பர் 10ம் தேதியில் திரையில் வெளியாக உள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் இப்படம் உருவாகி உள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் இப்படம் தீபாவளி விடுமுறை ஒட்டி வெளியாக உள்ளது. 

  விக்ரம் பிரபு நடிப்பில் நவம்பர் 10ம் தேதி அன்று ரெய்டு திரைப்படம் திரையரங்கில் வெளியாக உள்ளது. நடிகை ஸ்ரீதிவ்யா இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இயக்குனர் கார்த்தி இயக்கத்தில் இப்படம் வெளியாக உள்ளது. வெள்ளக்காரதுரை படத்திற்கு பின் இருவரும் இணைந்து நடிக்க இருப்பதால் இப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் எதிர்பார்க்கப்படுகின்றது. 

  தீபாவளி விடுமுறையை கொண்டாடும் விதமாக கிடா என்னும் சிறிய பட்ஜெட் திரைப்படம் திரையரங்கில் வெளியாக உள்ளது.

KH 234 Update ! கமல் பிறந்த நாளில் வெளியாகின்றது KH 234 படத்தின் ப்ரோமோ !

  தமிழ் மொழியில் டப்பிங் செய்யப்பட்ட பிற மொழி திரைப்படங்களும் தமிழ்நாட்டில் திரையரங்கில் வெளியாக உள்ளது. தீபாவளி ரிலீஸ் தமிழ் மூவிஸ் 2023.

  1. டைகர் 3 :

    சல்மான் கான் நடித்த டைகர் 3 திரைப்படம் தமிழ் , தெலுங்கு மற்றும் இந்தி மொழியில் திரையரங்குகளில் நவம்பர் 10ல் வெளியாக உள்ளது.

  2. The Marvels :

    The Marvels என்னும் திரைப்படம் இந்தியாவில் தமிழ் , இந்தி , தெலுங்கு மற்றும் ஆங்கிலம் மொழிகளில் நவம்பர் 10ம் தேதியில் திரையரங்கில் வெளியாக உள்ளது. 

  1. லேபில் ( Web தொடர் ) :

     அருண்ராஜ் காமராஜ் இயக்கத்தில் நடிகர் ஜெய் , மகேந்திரன் நடிப்பில் லேபில் இணையத்தொடர் நவம்பர் 10ம் தேதியில் Disney Plus hotstar என்னும் OTT தளத்தில் வெளியாக உள்ளது. தமிழ் போன்ற பல மொழிகளில் வெளியாக உள்ளது.

தீபாவளி ரிலீஸ் தமிழ் மூவிஸ் 2023

  2. தி ரோடு :

     நடிகை திரிஷா நடிப்பில் கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதியில் வெளியாகிய திரைப்படம் தி ரோடு. இப்படம் நவம்பர் 10ம் தேதியில் ஆஹா OTT தளத்தில் வெளியாக உள்ளது. 

விடுமுறை தினங்கள் என்றால் திரைப்படங்கள் பார்க்காமல் நிறைவு பெறுவது இல்லை. தியேட்டர் பிரியர்களுக்கு நான்கு புதுப் படங்களும் OTT பிரியர்களுக்கு என்று புதுப்படங்களும் வெளியாக உள்ளது. புதுப்படம் பாருங்க தீபாவளியை கொண்டாடுங்க. 

By Nivetha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *