பிக்பாஸ் கவினின் டாடா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த அபர்ணா தாஸிற்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை அபர்ணா தாஸ்
தென்னிந்திய தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் தான் அபர்ணா தாஸ். ஆரம்பத்தில் மாடலிங் துறையில் கலக்கி கொண்டிருந்த அவருக்கு மலையாள படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அங்கு பல படங்களில் நடித்த இவர் , தமிழில் தளபதி விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் செகண்ட் ஹீரோயினாக நடித்து கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்தார். இந்த படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்த இவர், அடுத்ததாக பிக்பாஸ் கவின் நடித்த டாடா என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார். இந்த படத்தின் மூலம் அவர் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமடைந்தார். தற்போது மீண்டும் மலையாள பக்கம் சென்ற அவருக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதாவது நடிகை அபர்ணா தாஸிற்கும் தீபக் பரம்பல் என்பவருடன் கல்யாணமாக இருப்பதாகவும், அதற்கான ஏற்பாடுகளில் இரு வீட்டார் குடும்பத்தினரும் இருந்து வருகிறார்கள் என்று கூறப்படுகிறது. மேலும் இவர்களது திருமணம் வரும் ஏப்ரல் 24ம் தேதி வடக்கன் சேரி என்ற இடத்தில் நடக்க உள்ளதாம். அபர்ணா தாஸ்க்கு பார்த்திருக்க மாப்பிள்ளை வேற யாரும் இல்லை, சமீபத்தில் ஒட்டுமொத்த சினிமாவையே புரட்டி போட்ட மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் நடித்தவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.