மீண்டும் லோகேஷுடன் இணையும் லியோ பட வில்லன்.., அப்ப.., "தலைவர் 171" படத்தில் பெரிய சம்பவம் இருக்கு?மீண்டும் லோகேஷுடன் இணையும் லியோ பட வில்லன்.., அப்ப.., "தலைவர் 171" படத்தில் பெரிய சம்பவம் இருக்கு?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக இருக்கும் “தலைவர் 171” படத்தில் லியோ பட வில்லன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென்னிந்திய தமிழ் சினிமாவில் சென்சேஷனல் இயக்குனராக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான லியோ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றாலும், கலவையான விமர்சனத்தையே எதிர்கொண்டது. இதனால் தன்னுடைய அடுத்த படத்தில் இது மாதிரியான நெகட்டிவ் விமர்சனங்கள் வர கூடாது என்பதற்காக முனைப்புடன் கதையை தயார் செய்து வருகிறாராம்.

தற்போது அவர் ரஜினியின் தலைவர் 171 படத்தை இயக்க இருக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் ஆரம்பிக்க இருப்பதாக தெரிவித்திருந்தார். சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில் ரசிகர்கள் அதை கொண்டாடி வருகின்றனர். மேலும் இப்படம் டைம் ட்ராவல் படமாக இருக்கலாம் என பர்ஸ்ட் லுக் போஸ்டரை வைத்து நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தில் லியோ பட வில்லன் இணைந்துள்ளதாக ஒரு முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதிமுக நகர செயலாளர் வீட்டுக்கு ரெய்டு விட்ட வருமான வரித்துறை.., சிக்கிய ரூ. 50 லட்ச ரொக்க பணம்!!

அதாவது விஜய் நடித்த லியோ படத்தில் சைக்கோ வில்லனாக நடித்து தன்னுடைய நடிப்பு திறமையை மொத்தமாக வெளி காட்டி அசத்தியவர் தான் டான்ஸ் மாஸ்டர் சாண்டி. அவர் தான் இப்படத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் நடிக்கிறாரா? அல்லது டான்ஸ் சொல்லித் தர போகிறாரா? என்பது தான் தெரியவில்லை. இருப்பினும் தலைவர் 171ல் பெரிய சம்பவம் காத்திருக்கிறது என்பது மட்டும் நன்றாக புரிகிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *