தரமான கம்பாக் கொடுத்த பிரசாந்த்: தமிழ் சினிமாவில் அடுத்த வாரம் கோலாகல கொண்டாட்டமாக இருக்க போகிறது. நேற்று டாப் ஸ்டார் பிரசாந்த் நடித்த அந்தகன் படம் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து விக்ரம் நடித்த தங்கலான் உட்பட ஏகப்பட்ட படங்கள் அடுத்த வாரம் திரைக்கு வர இருக்கிறது.
தரமான கம்பாக் கொடுத்த பிரசாந்த்
இதனால் தான் அந்தகன் படத்தை ஒரு வாரம் முன்னதாகவே வெளியிட பிளான் போட்டுள்ளார் பிரசாந்த். மேலும் இப்படத்தின் வெற்றி மூலம் தரமான கம்பாக் கொடுத்த பிரசாந்த் தற்போது விஜய் நடித்துள்ள கோட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனால் டாப் ஸ்டார் அடுத்த சில வருடங்களுக்கு பிஸியாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இதைதொடர்ந்து இப்படத்திற்கு போட்டியாக நேற்று அனில் எஸ்தர நடித்துள்ள மின்மினி படமும் வெளியானது. இப்படமும் பாசிட்டிவ் விமர்சனத்தை பெற்று வருகிறது. Andhagan
இதையடுத்து ஓடிடி பொறுத்தவரையில் கிட்டத்தட்ட 8 படங்கள் வெளியாகிறது. அதில் சங்கர், கமல் கூட்டணியின் இந்தியன் 2 நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இதே தளத்தில் தற்போது தி ப்ளைன்ட், தி அம்பர்லா அகாடமி வெப் சீரிஸும் வெளியாக இருக்கிறது . இதனை தொடர்ந்து மம்முட்டி நடிப்பில் வெளியான மலையாள படமான டர்போ சோனி லைவ் என்ற தளத்தில் வெளியாகிறது.
Also Read: “தமிழக வெற்றிக் கழகம்” கட்சியின் முதல் மாநாடு எப்போது? நிர்வாகிகள் கொடுத்த சூப்பர் அப்டேட்!!
மேலும் சோனியா அகர்வால் நடித்துள்ள 7g ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் நேற்று வெளியாகிறது.
அப்புறம் மலையாள படமான நடன சம்பவம் சிம்ப்ளி சவுத் தளத்தில் நாளை வெளியாகிறது.
அதேபோல் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் தற்போது தி ஹங்கர் கேம்ஸ் மற்றும் ஒன் ஃபாஸ்ட் மூவ் ஆகிய படங்கள் வெளியாகி இருக்கிறது.
இதே தளத்தில் நேற்று லிட்டில் மிஸ் ராவுத்தர் படமும் வெளியாகியுள்ளது. இப்படியாக இந்த வார இறுதியை 10 படங்களோடு கொண்டாடி மகிழலாம். actor prasanth
சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க
அதிகம் பேசப்படாத 5 சூப்பர் ஹிட் திரைப்படங்கள்
மகளை திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகர்
பாளையத்து அம்மன் படத்தில் நடித்த குழந்தையை நியாபகம் இருக்கா?
உலகநாயகன் கமல்ஹாசன் ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் புதிய அப்டேட்