ஐபில் தொடர் சிறப்பாக நடைபெற உதவிய மைதான பணியாளர்களுக்கு பரிசுத்தொகை - பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவிப்பு !ஐபில் தொடர் சிறப்பாக நடைபெற உதவிய மைதான பணியாளர்களுக்கு பரிசுத்தொகை - பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவிப்பு !

ஐபில் தொடர் சிறப்பாக நடைபெற உதவிய மைதான பணியாளர்களுக்கு பரிசுத்தொகை. இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகளவில் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்களின் விருப்பமான போட்டிகளில் ஒன்றான ஐபில் தொடர் தற்போது சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது குறிப்பிட தக்கது. இந்த ஐபில் போட்டியானது இந்தியாவில் உள்ள பத்திற்கும் மேற்பட்ட கிரிக்கெட் மைதானங்களில் நடைபெற்றுள்ளது. அந்த வகையில் கிரிக்கெட் மைதானங்களில் பணியாற்றிய பணியாளர்களை பாராட்டும் வகையில் பிசிசிஐ சார்பில் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக நடைபெற்ற ஐபில் தொடர் தற்போது முடிவடைந்துள்ள நிலையில், நேற்று நடந்த ஐபில் இறுதி போட்டியில் KKR vs SRH அணிகளுக்கு இடையே நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. நடைபெற்ற போட்டியில் KKR அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் SRH அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

IPL போட்டியில் தொடரும் அதிசயம் – இடது பக்கம் நின்றால் கப்பு கன்பார்ம் – அதிசயம் ஆனால் உண்மை!

இந்நிலையில் ஐபில் தொடர் போட்டிகளை வெற்றிகரமாக நடத்த உதவிய மைதான பணியாளர்களுக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் 10 ஐபில் மைதானங்களில் பணியாற்றிய ஊழியர்களுக்கு ரூ.25 லட்சமும், மற்ற 3 மைதானங்களில் பணியாற்றிய ஊழியர்களுக்கு ரூ.10 லட்சமும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *