Home » செய்திகள் » இனி மழைக்கு ரெஸ்ட் – அடுத்த 7 நாளைக்கு சுட்டெரிக்க போகும் வெயில் – வானிலை மையம் எச்சரிக்கை!

இனி மழைக்கு ரெஸ்ட் – அடுத்த 7 நாளைக்கு சுட்டெரிக்க போகும் வெயில் – வானிலை மையம் எச்சரிக்கை!

இனி மழைக்கு ரெஸ்ட் - அடுத்த 7 நாளைக்கு சுட்டெரிக்க போகும் வெயில் - வானிலை மையம் எச்சரிக்கை!

அடுத்த 7 நாளைக்கு சுட்டெரிக்க போகும் வெயில்: தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கோடை மழை பொழிந்து வந்த நிலையில், தற்போது சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” தமிழகத்தில் நாளை முதல் 31ஆம் தேதி வரை வெப்பநிலை வழக்கத்தை விட அதிகமாக இருக்க போகிறது. குறிப்பாக இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க கூடும்.

ஆனால் சென்னையை பொறுத்தவரை 102 டிகிரி செல்சியஸ் வெயில் வெளுத்து வாங்கும். மேலும் தென்மேற்கு வங்கக்கடலில் இன்று சூறைக்காற்று வீசும். அதே போல் நாளை மற்றும் மறுநாள் மன்னார் வளைகுடா, குமரிக் கடல் உள்ளிட்ட பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்று தெரிவித்துள்ளது. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல கூடாது என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 7 நாளைக்கு சுட்டெரிக்க போகும் வெயில் tamilnadu weather report news – India Meteorological Department

அடேங்கப்பா –  98 வயசுல ஜிம்னாஸ்டிக்ஸ் செய்து அசத்திய மூதாட்டி – ஆனந்த் மஹிந்திரா நெகிழ செய்த வீடியோ!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top