கொடைக்கானல் மோயர் பாயிண்ட் வனப்பகுதியில் சிக்கிய சுற்றுலா பயணிகள் - வனத்துறையினருக்கு காத்திருந்த அதிர்ச்சி!கொடைக்கானல் மோயர் பாயிண்ட் வனப்பகுதியில் சிக்கிய சுற்றுலா பயணிகள் - வனத்துறையினருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

கொடைக்கானல் மோயர் பாயிண்ட் வனப்பகுதியில் சிக்கிய சுற்றுலா பயணிகள்: தமிழகத்தில் பேமஸ் டூரிஸ்ட் இடமான கொடைக்கானலுக்கு கோடை விடுமுறையை கொண்டாட பல்வேறு பகுதியில் இருந்து சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று முன்தினம் சிங்கப்பூரில் இருந்து மயிலாடுதுறையை சேர்ந்த 9 பேர் கொடைக்கானலுக்கு சென்றுள்ளனர். மேலும் அங்கு இருக்கும் பில்லர் ராக், பைன் பாரஸ்ட்,  குணா குகை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றுள்ளார். இதனை தொடர்ந்து மாலை 6 மணி அளவில் மோயர் பாயிண்ட் என்ற வனப்பகுதிக்கு சென்ற போது எதிர்பாராத விதமாக அவர்கள் வந்த வாகனம் பழுதடைந்து. இதையடுத்து அந்த 9 பேரும்  மோயர் பாயிண்ட் பகுதியை சுற்றி பார்த்தனர். இதையடுத்து வாகனம் இருக்கும் இடத்திற்கு  வந்த சுற்றுலா பயணிகளுக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

அதாவது வேனை ட்ரைவரால் நகற்ற முடியவில்லை.எனவே உதவிக்கு ஆட்களை கூப்பிட மூன்று பேர் மட்டும் வனப்பகுதிக்குள் சென்றனர். மற்ற 6 ஆறு பேரும் மோயர் பாயிண்ட் வனப்பகுதியிலே நின்று கொண்டிருந்தனர். நேரம் கடந்த நிலையில் அப்பகுதியை முழுவதும் இருள் சூழ்ந்தது. அந்த கும்மிருட்டில் காட்டெருமைகள் உலா வர தொடங்கியது. இதை பார்த்த சுற்றுலா பயணிகள் பதற்றம் அடைந்தனர். அதன்பின்னர் கவுண்டர் டிக்கெட் கொடுக்கும் இடத்தில் தஞ்சம் அடைந்தனர்.

தவெக கட்சி தலைவர் விஜய்யின் அடுத்த மூவ் – நாளை தமிழகம் முழுவதும் மாபெரும் அன்னதானம் –  புஸ்ஸி ஆனந்த் அறிவிப்பு!

இதற்கிடையில் உதவி கேட்க சென்ற 3 பேர் கொடைக்கானல் பஸ் ஸ்டாண்ட்-க்கு சென்று வாடகை கார் டிரைவரிடம் உதவி கேட்டனர். உடனே அந்த டிரைவர், வனத்துறையினரிடம் தகவல் தெரிவித்தார். இதனை தொடர்ந்து மோயர் பாயிண்ட்  வனப்பகுதிக்கு சென்ற வனத்துறையினர் தேடுதல் பணியை தொடங்கினர். சரியாக இரவு 11 மணியளவில் அந்த 6 பேரையும் வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

கொடைக்கானல் மோயர் பாயிண்ட் வனப்பகுதியில் சிக்கிய சுற்றுலா பயணிகள் – kodaikanal news – kodaikanal top places – guna cave – piller rack – moir point

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *