மொத்தம் 16 லட்சம்டா.., பண பெட்டியை தூக்கி பிக்பாஸ் வீட்டுக்கு டாடா காட்டி காட்டிய போட்டியாளர்.., சரியான டிவிஸ்ட்டா இருக்கே!!மொத்தம் 16 லட்சம்டா.., பண பெட்டியை தூக்கி பிக்பாஸ் வீட்டுக்கு டாடா காட்டி காட்டிய போட்டியாளர்.., சரியான டிவிஸ்ட்டா இருக்கே!!

விஜய் தொலைக்காட்சியில் மக்களுக்கு மிகவும் பிடித்த ஷோவான பிக்பாஸ் சீசன் 7, கிட்டத்தட்ட 96 நாட்களை கடந்து விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கிறது. தற்போது பிக்பாஸின் முக்கிய டாஸ்க்கான பணப்பெட்டி டாஸ்க் நடைபெற்று வருகிறது. எட்டு போட்டியாளர்களில் யார் இந்த பணப்பெட்டியை எடுக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகம் இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து விசித்ரா 13 லட்சம் கொண்ட பணப்பெட்டியை எடுத்து கொண்டு வெளியேறிவிட்டார் என்று ஒரு தகவல் பரவி வந்த நிலையில், நேற்றைய எபிசோடில், 30 லட்சமே வைத்தாலும் நான் எடுக்க மாட்டேன் என்று தினேஷிடம் கூறியுள்ளார்.

எனவே அவர் பெட்டி எடுக்க வாய்ப்பில்லை என்று நெட்டிசன்கள் கூறி வந்த நிலையில் சொன்னது போல் பெட்டியை தூக்கி பிக்பாஸ் வீட்டுக்கு டாடா காட்டி ஒரு போட்டியாளர் வெளியேறி சென்று விட்டதாக ஒரு தகவல் சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. அது வேற யாரும் இல்லை மக்களே.., நம்ம பூர்ணிமா ரவி தான். இவர் மாயாவுடன் சேர்ந்து ஏற்கனவே பணப்பெட்டியை எடுக்க பிளான் செய்து வைத்திருந்தார். இந்நிலையில் 16 லட்சமாக பணப்பெட்டி இருந்த நிலையில் அதை எடுத்து கொண்டு பிக்பாஸ் வீட்டை விட்டு நடையைக் கட்டி உள்ளார் என்று சொல்லப்படுகிறது.. மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *