
தமிழ் சினிமாவில் நம்பிக்கை நாயகனாக இருந்து வரும் விஜய் மறைந்த கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த போது கூட்டத்தில் ஒருவர் அவர் மீது செருப்பை தூக்கி எறிந்தார். கேப்டனுக்கும் விஜய்க்கும் நல்ல உறவு இருந்த போதிலும் இப்படி ஒரு சம்பவம் யாரும் எதிர்பார்க்காத ஒன்று. இப்படி விஜய் மீது வன்மம் இருக்க என்ன காரணம் என்று தெரியவில்லை. ஆனால் தன்னை வெறுத்தவராக இருந்தாலும் அவர்களுக்கும் சேர்த்து உழைக்கும் எண்ணம் கொண்டவர் தான் விஜய். இந்நிலையில் விஜய் மீது செருப்பு எறிந்தார் குறித்து மக்கள் இயக்கத்தை சேர்ந்த ஒருவர் புகார் கொடுத்துள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!!

அதில் கூறியிருப்பதாவது, மறைந்த கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த தளபதி விஜய் மீது செருப்பை எறிந்த சம்பவம் ரசிகர்கள், அவர் மீது பாசம் வைத்துள்ள மக்களின் மனதை புண்படுத்தும் விதமாக இருக்கிறது. எனவே தளபதி மீது செருப்பை எறிந்த நபரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் துறையிடம் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் என்று தென் சென்னை மாவட்ட தலைமை செயலாளர் புகார் கொடுத்துள்ளார்.