ஆஹா.., இது தான் GOAT படத்தோட கதையா? 50 வருஷம் போலிஸுக்கு தண்ணி காட்டிய கடத்தல் மன்னன் கேரக்ட்ரில் விஜய்?ஆஹா.., இது தான் GOAT படத்தோட கதையா? 50 வருஷம் போலிஸுக்கு தண்ணி காட்டிய கடத்தல் மன்னன் கேரக்ட்ரில் விஜய்?

திரையுலகில் வசூல் மன்னனாகவும், தமிழ்நாட்டின் செல்லப் பிள்ளையாகவும் ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். தற்போது இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் GOAT(The Greatest of All Time) என்ற படத்தில் நடித்து வருகிறார். பொதுவாக விஜய் படம் என்றாலே எதிர்பார்ப்பு அதிகமாக தான் இருக்கும். அதே போல் இந்த படத்திற்கும் இருந்து வரும் நிலையில், வெளியான பர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் போஸ்டரை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சும்மாவே விமர்சனங்களுக்கு பாரபட்சம் பார்க்காமல் இருந்து வரும் நெட்டிசன்கள் மத்தியில் இந்த போஸ்டர்கள் வர பிரசாதம் மாதிரி அமைந்துள்ளது.

விஜய் GOAT  கதை
விஜய் GOAT கதை

இந்நிலையில் இந்த படத்தின் கதை யாரை பற்றியது என்னவென்றால் அமெரிக்காவை அலறவிட்ட டி.பி கூப்பர் கடத்தல் மன்னனை பற்றி தான் படமாம். அவருடைய கதாபாத்திரத்தில் தான் விஜய் நடிப்பதாக சொல்லப்படுகிறது. அப்படி அந்த கடத்தல் மன்னன் என்ன செய்துள்ளார் என்று பார்த்தால். இவர் கடந்த 50 வருடங்களுக்கு முன்னர் ஒரு விமானத்தில் 36 பயணிகளுடன் பயணித்துள்ளார். அப்போது அங்குள்ள பணி பெண்ணிடம் ஒரு லெட்டரை கொடுக்கிறார். அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அந்த பெண் தனது பையில் வைக்க, உடனே டி.பி கூப்பர் அந்த பெண்ணை அழைத்து என்னிடம் ஒரு பாம் இருக்கிறது. நீ போய் பைலட்டிடம் சொல்லு.எனக்கு இரண்டு லட்சம் பணம் வேண்டும் என்றும் பேராஷூட் இரண்டு வேண்டும் என்று கேட்டுள்ளார். மேலும் விமானம் தரையிறங்க கூடாது என்றும் நிபந்தனை வைத்திருந்தார்.

விஜய் GOAT  கதை
விஜய் GOAT கதை

அவர் சொன்னதை போல விமானம் தரையிறங்காமல் மேலேயே சுற்றிய   நிலையில், சிபிஐ அவர் கேட்டதை கொடுத்து 36 பயணிகளை மீட்டனர். ஆனால் அந்த விமானத்தில் இருந்து எப்படி தப்பித்தார் என்பது தான் கதை. ஏன் டி.பி கூப்பரின்  கதை சொல்கிறேன் என்று பார்த்தால், இதற்கு முன் வெளியான பர்ஸ்ட் லுக் செகண்ட் லுக் போஸ்டரில் விஜய் பாரஷூட் வைத்திருப்பதும் பின்னாடி விமானம் பறந்து கொண்டிருப்பதையும் நம்மால் காண முடிகிறது. இதனால் இந்த கதை GOAT படத்தின்  கதை என்று சோசியல் மீடியாவில் பலரும் கூறி வருகின்றனர். மேலும் இது மாதிரியான கொள்ளை, கடத்தல் சம்பந்தமாக வெங்கட் பிரபு படம் இயக்குவதில் கெட்டிக்காரர் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *