பிக்பாஸ் சீசன் 7 டைட்டிலை தட்டி தூக்கிய பெண் போட்டியாளர்? யாருன்னு தெரியுமா? எதிர்பாராததை எதிர்ப்பாருங்கள்!!பிக்பாஸ் சீசன் 7 டைட்டிலை தட்டி தூக்கிய பெண் போட்டியாளர்? யாருன்னு தெரியுமா? எதிர்பாராததை எதிர்ப்பாருங்கள்!!

விஜய் டிவியில் பெரும்பாலான மக்களின் ஃபேவரைட் ஷோவாக இருந்து வரும் பிக்பாஸ் சீசன் 7 பைனல் இன்று பிரம்மாண்டமாக கொண்டாடப்பட இருக்கிறது. 23 போட்டியாளர்கள் உள்ளே களமிறங்கிய நிலையில் தற்போது வெறும் 5 பேர் மட்டுமே பைனல் வரை சென்றுள்ளனர். அதன்படி இந்த சீசனில் மாயா, தினேஷ், விஷ்ணு, மணி மற்றும் அர்ச்சனா பைனலில் உள்ள நிலையில் அதில் யார் வெற்றி பெற்று டைட்டிலை அடிக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருந்து வருகிறது.

மேலும் இந்த முறை ஒரு பெண் தான் டைட்டில் அடிப்பார் என்றும் சொல்லப்படுகிறது. அப்படி ஒரு பெண் டைட்டில் அடித்தால் இது இரண்டாவது முறையாகும். கடந்த 2வது சீசனில் நடிகை ரித்விகா டைட்டில் வாங்கினார். எனவே இந்த சீசனில் மாயா மற்றும் அர்ச்சனா என இந்த இருவரில் ஒருவர் தான் திட்டில் அடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

எனவே வாக்குகள் வைத்து பார்க்கும் பொழுது மாயாவை விட அர்ச்சனா அதிகமாக இருப்பதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் விஜய் டிவி மாயாவுக்கு சப்போர்ட் செய்து வருவதாகவும் கண்டிப்பாக மாயா தான் டைட்டில் அடிப்பார் என சொல்லப்படுகிறது. எனவே நீங்கள் யார் டைட்டில் அடிப்பார் என்று நினைக்கிறீர்கள் என்று கமெண்ட் செய்யுங்கள். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *