
தென்னிந்திய தமிழ் சினிமாவில் கமல்ஹாசனுக்கு பிறகு எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அசராமல் நடிக்கும் நடிகர் தான் விஜய் சேதுபதி. ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்து தற்போது ஹீரோவாகவும் வில்லனாகவும் மிரட்டி கொண்டிருக்கிறார். தற்போது இவரும் கத்ரீனா கைஃப் நடித்த கிறிஸ்துமஸ் திரைப்படம் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக கலந்து கொண்ட விஜய் சேதுபதி தனது காதல் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அதாவது அவர் பேசியதாவது, நான் நடிக்க வருவதற்கு முன்னர் பல இடங்களில் வேலை பார்த்து வந்துள்ளேன். அப்போது ஒரு இடத்தில் கணக்கு எழுதுபவராக வேலை பார்க்கும் பொழுது தான் இணையதளத்தில் ஜெர்சி பழக்கம் கிடைத்தது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!

முதலில் சாதாரணமாக பேசி வந்த நிலையில், இருவருக்கும் காதல் முளைத்துவிட்டது. உடனே இருவரும் வீட்டில் சொன்ன போது முதலில் அவர்கள் ஏற்றுகொள்ளவில்லை. அப்புறம் நாங்கள் பேசி சம்மதிக்க வைத்தோம். அதன்பின், நிச்சயதார்த்தத்திற்காக வீட்டிற்கு வந்தபோது தான் ஜெஸ்ஸியை சந்தித்தேன். இப்பொழுது எங்களுக்கு இரு பிள்ளைகள் உள்ளன என்று முகத்தில் சிரிப்புடன் கூறியுள்ளார்.