அதிமுக கட்சியில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்.., இது என்னடா புது ட்விஸ்ட்டா இருக்கு? யாருன்னு தெரியுமா?அதிமுக கட்சியில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்.., இது என்னடா புது ட்விஸ்ட்டா இருக்கு? யாருன்னு தெரியுமா?

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையும் நடன கலைஞராகவும் திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் காயத்ரி ரகுராம். ஆரம்பத்தில் கொடிகட்டி பறந்து வந்த இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இல்லாமல், தொடர்ந்து நடன இயக்குனராக பல படங்களில் பணியாற்றி வந்தார். ஒரு கட்டத்தில் அதுவும் கைவிட்டு போன நிலையில் தான் அவருக்கு தனியார் சேனலில் ஆரம்பிக்கப்பட்ட உலக நாயகன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 1 ல் கலந்து கொள்ளும் வாய்ப்பு வந்தது.

அதை பயன்படுத்தி மீண்டும் சினிமாவில் முன்னுக்கு வர நினைத்தார். ஆனால் இந்த ஷோவில் ரசிகர்களால் வரவேற்பு பெறாமல் பாதியில் வெளியேறினார். அதன் பிறகு அரசியலில் குதித்த அவர் பாஜகவில் இணைந்தார். அதில் நன்றாக செயலாற்றி வந்த அவருக்கு, பாஜக தலைவர் அண்ணாமலையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த கட்சியில் இருந்து விலகினார்.

இந்நிலையில் நடிகை காயத்ரி ரகுராம் அதிமுக கட்சி பொது செயலாளரான எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து, அதிமுக கட்சியில் இணைந்தார். இது குறித்து அவர் பேசியதாவது, நன்றியை ஒருபோதும் மறக்க மாட்டேன். என் குடும்பத்தினர் எப்போதும் அதிமுக கட்சிக்கு தான் சப்போர்ட் என்று கூறினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 

இப்படி கூட நடக்குமா.., குழந்தையை எரித்து சாம்பலை கல்லாக மாற்றிய பெற்றோர்.., எங்கே? என்ன நடந்தது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *