இந்த போட்டோவில் இருக்கும் பிக்பாஸ் பிரபலம் யார் தெரியுமா? 100 நாட்களை கடந்த போட்டியாளர்? கெஸ் பண்ணுங்க பார்க்கலாம்!!இந்த போட்டோவில் இருக்கும் பிக்பாஸ் பிரபலம் யார் தெரியுமா? 100 நாட்களை கடந்த போட்டியாளர்? கெஸ் பண்ணுங்க பார்க்கலாம்!!

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் ஒரு சில நிகழ்ச்சிகள் மட்டுமே மக்கள் மனதை கவர்ந்து வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ஷோவுக்கு என்று மக்கள் மத்தியில் ஒரு மவுஸ் இருந்து வருகிறது. மக்களின் வரவேற்பு அதிகம் இருப்பதால் மட்டுமே இந்த ஷோ 6 சீசன்களை கடந்து ஏழாவது சீசன் முடிவுக்கு வரும் வரை சென்றுள்ளது. மேலும் இந்த ஷோவுக்கு பிளஸ் பாயிண்ட் என்னவென்றால் இந்த ஷோவை  உலக நாயகன் தொகுத்து வழங்குவதால் தான்.

இதனால் தான் இந்த ஷோவோட டிஆர்பி எகிறி போய்யுள்ளது. இந்நிலையில் இந்த ஏழாவது சீசன் இந்த வாரத்துடன் முடிவுக்கு வரும் நிலையில், இந்த சீசனில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு 100 நாட்கள் கடந்து விறுவிறுப்பாக விளையாடி வருபவர் தான் நடிகை மாயா கிருஷ்ணன். பல மேடைகளில் மக்களை சிரிக்க வைத்த இவருக்கு விக்ரம் திரைப்படம் மூலம் நல்ல ரீச் கிடைத்தது. மேலும் இந்த ஷோவில் கலந்து கொண்டு பட்டிதொட்டியெல்லாம் பிரபலமடைந்தார்.

இருப்பினும் அவருக்கு அதிகமாக நெகட்டிவ் விமர்சனங்கள் எழுந்து கொண்டு தான் இருக்கிறது. ஏன் சொல்ல போனால் இந்த ஷோவே அவரை காப்பாற்றி வைக்கிறார்கள் என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். இருந்தாலும் மாயா ஒரு மிகப்பெரிய கலைஞன் என்றால் அது மிகையாகாது. இந்நிலையில் அவருடைய சிறிய வயது புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் மாயாவா இது? என்று ஆச்சரியப்பட்டு வருகின்றனர். 

பிக்பாஸ் மாயா கிருஷ்ணன்
பிக்பாஸ் மாயா கிருஷ்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *