என்னடா சொல்றீங்க .., CWC -5ல் இந்த கோமாளி இல்லையா?.., அவரே சொன்ன பதில்?.., அதிர்ச்சியில் ரசிகர்கள்!!என்னடா சொல்றீங்க .., CWC -5ல் இந்த கோமாளி இல்லையா?.., அவரே சொன்ன பதில்?.., அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

விஜய் டிவியில் மிகவும் பேமஸான ஷோவான குக் வித் கோமாளி நிகழ்ச்சி இதுவரை நான்கு சீசன்களை கடந்த நிலையில், 5வது சீசனுக்கு அடியெடுத்து வைத்துள்ளது. வழக்கம் போல் பிக்பாஸ் ஷோ முடிந்தவுடன் ஆரம்பிக்கும் இந்த ஷோவில் போட்டியாளராக நம் எல்லோருக்கும் பரிச்சயமான முகங்கள் தான் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

அதன்படி இந்த சீசனில் தீபா வெங்கட், தம்பி ராமையாவின் மகனான உமாபதி, பிக்பாஸ் விஷ்ணு, மாளவிகா மோகனன், பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமா, பிரபல நடிகை வடிவுக்கரசி மற்றும் டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதரின் மகளான அக்ஷிதா ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் வழக்கம் போல் கோமாளிகளில் மாற்றம் இல்லை என்று கூறி வந்த நிலையில், தற்போது அதிர்ச்சி தரும் செய்தி ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

அதாவது கடந்த சீசனில் கோமாளியாக அசத்திய பிக்பாஸ் ரவீனா இந்த சீசனில் கலந்து கொள்ள மாட்டாராம். அவர் தற்போது ஜோடி ஆர் யூ ரெடி என்ற ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்டதால், இந்த சீசனில் கலந்து கொள்ள வாய்ப்பு கம்மி என்றும், குக் வித் கோமாளி குழுவிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை என்று ரவீனா இன்ஸ்டாகிராம் லைவில் தெரிவித்துள்ளார். இதை கேட்ட ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த ஷோ இம்மாத இறுதிக்குள் ஆரம்பமாக இருப்பதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது. 

அடக்கடவுளே.., இமான் முதல் மனைவியை போன் பண்ணி டார்ச்சர் கொடுத்த சிவகார்த்திகேயன் – பிரிவுக்கு காரணம் இது தானா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *