bigg boss season 7 updatebigg boss season 7 update

   bigg boss season 7 update tamil பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் நாளை பிரம்மாண்டமாக தொடங்க இருக்கின்றது. இந்நிலையில் இந்நிகழ்ச்சியில் புதிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. நிகழ்ச்சியின் சூட்டிங் தற்போது ஆரம்பமாகி விட்டது. இதில் பாரதி கண்ணம்மா நிகழ்ச்சியில் நடித்த வினுஷா தேவி கலந்து கொள்ள இருக்கின்றார் என்ற தகவல் உறுதியாகி உள்ளது.

Bigg Boss Season 7 Update ! தொடக்க விழா சூட்டிங் ஆரம்பமானது !

bigg boss season 7 update tamil

பிக் பாஸ் நிகழ்ச்சி துவக்கம் :

 1. பிக் பாஸ் நிகழ்ச்சியில் எப்போதும் ஆரம்பத்தில் கமல்ஹாசன் வீட்டினை சுற்றிக்காட்டுவர். 

 2. அதனை தொடர்ந்து பங்கேற்ப்பாளர்களின் நடனம் இருக்கும். 

 3. கமல்ஹாசன் அவர்கள் யார் என்பதை மக்களுக்கு தெரிவிப்பார். 

 4. பங்கேற்ப்பாளர்கள் வீட்டிற்குள் செல்வர். இந்த நடைமுறை தான் பிக் பாஸ் வீட்டில் வழக்கம் போல் இருக்கும். 

JOIN SKSPREAD WHATSAPPCLICK HERE

சூட்டிங் ஆரம்பமானது :

   இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் சூட்டிங் தற்போது ஆரம்பமாகி உள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது. நிகழ்ச்சியில் பங்கேற்ப்பாளர்களின் நடனம் நிகழ்ச்சி மற்றும் வீட்டின் உள்ளே செல்லும் சூட்டிங் தற்போது நடந்து வருகின்றது. 

புதிய அப்டேட் :

   பிக் பாஸ் சீசன் 7ல் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்த வினுஷா தேவி கலந்து கொள்ள இருக்கின்றார் என்ற தகவல் உறுதியாகி உள்ளது. இந்நிலையில் நேற்று தான் இவரின் இன்ஸ்ட்ராகிராம் என்னும் சமூக வலைதள பக்கமானது ( Blue Tick ) அதிகாரப்பூர்வமாகி உள்ளது. மேலும் இவரின் பெயரில் யூடிப் கணக்கு ஒன்றையும் நடத்தி வருகின்றார். இஸ்ட்ராகிராம் மற்றும் யூடிப் இவர்கள் இரண்டும் நிகழ்ச்சியில் வெற்றி பெறுவதற்கு உதவியாக இருக்கும். 

இரண்டு வீடு :

   இந்த ஆண்டு இந்தி மொழியில் நடக்கும் பிக் பாஸ் நிகச்சியில் இரண்டு வீடு இருக்கின்றது. இதே போல் தான் தமிழ் மொழியிலும் இந்த ஆண்டு இரண்டு வீடுகள் என்று அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. ஒரு வீட்டிற்கு பத்து பேர்கள் தங்க போகின்றார்கள். மற்றொரு வீட்டில் பத்து பேர்கள் தங்க போகின்றார்கள் என்று சொல்லப்படுகின்றது.

Zee Tamil  புது சீரியல் பிரைம் டைமில் ஒளிபரப்பு செய்வதாக அறிவிப்பு !

வெளியானது போட்டியாளர்கள் பெயர் :

   வினுஷா தேவி , KPY பாலா , இஃபான் முகமத் , கூல் சுரேஷ் , குமரன் , ரவீனா , ஜோவிதா விஜயகுமார் , குக் வித் கோமாளி விசித்ரா , உமாரியாஸ் , குக் வித் கோமாளி ஸ்ருதிகா , பப்லு பிரித்விராஜ் , கோவை ஷர்மிளா , செய்தி வாசிப்பாளர் ரஞ்சித் , வேல ராம மூர்த்தி , KPY சரத் , ரோஷினி , அம்மு அபிராமி , ரக்ஷிதா கணவர் , ரக்சன் போன்றவர்கள் இந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.     

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *