உலகக்கோப்பை 2023உலகக்கோப்பை 2023

உலகக்கோப்பை 2023 இந்தியா மற்றும் இங்கிலாந்து மோதும் போட்டி மழையால் ரத்து. டாஸ் போடும் முன்பே கருமேகம் சூழ்ந்தது. சிறிது நேரத்தில் மழை பெய்ய தொடங்கியது. மைதான ஊழியர்கள் தார்ப்பாய் கொண்டு மூடத் தொடங்கினர். மழையால் ரசிகர்கள் அனைவரும் மேலே உள்ள தளத்தில் தஞ்சம் அடைந்தனர். ஆட்டம் நடைபெறாததால் சோகத்துடன் காணப்பட்டனர்.

உலகக்கோப்பை 2023 ! இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான பயிற்சி போட்டி மழையால் ரத்து !

உலகக்கோப்பை 2023

சிறிது நேரத்தில் மழை குறைந்தது. நடுவர்கள் மைதானத்தை ஆய்வு செய்தனர். ஆனால் மைதானத்தை தயார் செய்ய ஊழியர்களுக்கு 90 நிமிடம் தேவைப்படும். சிறிது நேரத்தில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. மிக கன மழையாக பெய்ய தொடங்கியது. மழை காரணமாக ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

JOIN SKSPREAD WHATSAPPCLICKHERE

இந்தியா சமீபத்தில் நிறைய டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. கடைசியாக ஆசியுடன் ஒரு நாள் போட்டியிலும் விளையாடியது. இதனால் சற்று சோர்வாக இருக்க வாய்ப்பு உண்டு. இன்னும் 5 நாட்களில் உலகக்கோப்பை 2023 முதல் போட்டி தொடங்க உள்ளது. அதற்கு முன் பயிற்சி ஆட்டம் ஆடினால் நல்லது. ஆனால் இப்படி மழையால் போட்டி தடை செய்ய படுகிறது வருத்தம் தான்.

நாளை முதல் பழனி கோவிலில் செல்போன் கொண்டு செல்ல தடை ! கோவில் நிர்வாகம் அறிவிப்பு !

இந்தியாவுக்கு அடுத்த பயிற்சி ஆட்டம் வரும் செவ்வாய் அன்று நடக்க உள்ளது. அந்தப் போட்டியில் இந்தியா நெதர்லாந்தை எதிர்கொள்கிறது. அந்த ஆட்டம் திருவனந்தபுரத்தில் நடக்க உள்ளது. இங்கிலாந்து வரும் திங்கள்கிழமை அடுத்த பயிற்சியாட்டத்தில் விளையாடுகிறது. அந்த ஆட்டத்தில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. ஆனால் இந்த இரண்டு போட்டிகளும் மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *