நாளை முதல் பழனி கோவிலில் செல்போன் கொண்டு செல்ல தடைநாளை முதல் பழனி கோவிலில் செல்போன் கொண்டு செல்ல தடை

   பழனி முருகன் கோவிலுக்குள் நாளை முதல் புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பது தடை செய்யப்பட்டு உள்ளது. நீதிமன்ற உத்தரவினை தொடர்ந்து கோவில் நிர்வாகமும் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. இதனால் பழனி முருகன் கோவிலில் நாளை முதல் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

நாளை முதல் பழனி கோவிலில் செல்போன் கொண்டு செல்ல தடை ! கோவில் நிர்வாகம் அறிவிப்பு !

நாளை முதல் பழனி கோவிலில் செல்போன் கொண்டு செல்ல தடை

பழனி முருகன் கோவில் :

    முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாவது அறுபடை வீடாக இருப்பது பழனி முருகன் கோவில். இந்த கோவிலில் பக்தர்கள் மலை ஏறுவதற்கு ரோப் கார்களும் மின்இழுவை ரயில்களும் பயன்படுத்தப்படுகின்றது. இங்கு காலை 5.40 மணி முதல் மாலை 8 மணி வரையில் முருகனுக்கு பூஜைகள் நடைபெற்று வருகின்றது. இக்கோவிலில் நடைபெறும் தைபூச திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும்.

பக்தர்கள் தரிசனம் செய்யும் நேரம் :

1. இலவச தரிசனம் – காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையில் அனுமதிக்கப்படும். பண்டிகை காலங்களில் காலை 4 மணி முதல் 8 மணி வரையில் அனுமதிக்கப்படும்.

2. சிறப்பு தரிசனம் – காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையில் அனுமதிக்கப்படும். மேலும் பண்டிகை காலங்களிலும் இதே நேரம் தான் பின்பற்றப்படும்.

3. சிறப்பு நுழைவு தரிசனம் – காலை 7 மணி முதல் இரவு 7.30 மணி வரையில் பக்தர்க்கல் அனுமதிக்கப்படுவர். பண்டிகை காலத்தில் காலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையில் அனுமதிக்கப்படுவார்கள்.

JOIN SKSPREAD WHATSAPPCLICK HERE

மூலவர் சிறப்புகள் :

   பழனி முருகன் கோவிலில் வைக்கப்பட்டு இருக்கும் மூலவர் சிலையானது போகர் சித்தர் நவபாஷாணம் கொண்டு வடிவமைக்கப்பட்டு உள்ளது. மூலவர் சன்னதியில் செல்போன் கொண்டு புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பது போன்றவைகள் தடை செய்யப்பட்டு உள்ளது. ஆனால் பக்தர்கள் தடையையும் மீறி புகைப்படம் எடுக்கத்தான் செய்கின்றார்கள். 

நீதிமன்றம் உத்தரவு :

   இதனால் சென்னை உயர் நீதிமன்றம் பழனி முருகன் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்வதற்கு தடை விதித்து உள்ளது. நீதிமன்ற உத்தவினை தொடர்ந்து கோவில் நிர்வாகமும் நாளை (அக்டோபர் 1)ம் தேதி முதல் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை என்று அறிவிப்பினை வெளியிட்டது.

செல்போன் பாதுகாப்பு மையம் :

   செல்போன் தடை விதிக்கப்பட்டு உள்ளதன் காரணமாக கோவிலில் மூன்று இடங்களில் செல்போன் பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டு உள்ளது. அவையாவன ரோப்கார் , மின்இழுவை ரயில் நிலையம் , பாத விநாயகர் கோவில் போன்ற இடங்களில் அமைக்கப்பட்டு உள்ளது.

    பாதுகாப்பு மையத்திற்கு என்று 30 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றார்கள். இவர்களுக்கு செல்போன் வாங்குதல் , கொடுத்தல் போன்ற முறையான பயிற்சிகள் வழங்கப்பட்டு உள்ளது. செல்போன்களை ரேக்குகளில் பாதுகாப்பாக வைப்பதற்கு என்று 5ஆயிரம் பைகள் தயார் செய்யப்பட்டு உள்ளது என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.  

கட்டணம் & செல்போன் பாதுகாப்பு :

   பழனி முருகன் கோவிலில் செல்போன் பாதுகாப்பிற்கு என்று ரூ. 5 கட்டணமாக வசூலிக்கப்பட இருக்கின்றது.

வைகை எக்ஸ்பிரஸ் புறப்படும் நேரம் மாற்றம் ! வந்தே பாரத்தால் வந்த சோதனை !

மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை :

   செல்போன் பாதுகாப்பு மையங்கள் கோவில் மலையடிவாரத்தில் அமைக்கப்பட்டு இருக்கின்றது. மையங்கள் மலைக்கோவில் அமைந்திருந்தால் ஏதுவாக இருக்கும் என்று பக்தர்கள் கூறுகின்றார்கள். மேலும் மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கட்டணத்தொகையில் விதி விளக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் கோவில் நிர்வாகத்திடம் எழுந்துள்ளது.

கோவில்களை நாம் அடுத்த தலைமுறைகளுக்கு பாதுகாப்பாக அளிக்க வேண்டும். அதன் ஒரு முயற்சியாக தற்போது நீதிமன்றமும் கோவில் நிர்வாகமும் கோவிலில் செல்போன் பயன்படுத்த தடை விதித்துள்ளனர். மேலும் பாதுகாப்பு மையம் அமைத்து பாதுகாப்பு தருவது பெரும்பாலானோர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *