ஏன்டா பிக்பாஸே முடிஞ்சு.., இன்னும் உங்க வன்மம் முடியலையாடா? உள்ளதான் அப்பிடின்னா, வெளியவுமா? மாயா, விஷ்ணு செய்த காரியம்!!ஏன்டா பிக்பாஸே முடிஞ்சு.., இன்னும் உங்க வன்மம் முடியலையாடா? உள்ளதான் அப்பிடின்னா, வெளியவுமா? மாயா, விஷ்ணு செய்த காரியம்!!

சின்னத்திரையில் மக்களை அதிகம் கவர்ந்து இழுத்த பிக்பாஸ் சீசன் 7 சமீபத்தில் தான் முடிவுக்கு வந்தது. இந்த சீசனில் விஜே அர்ச்சனா டைட்டிலை அடித்து சென்றார். இதுவரை எந்த சீசனிலும் போட்டியாளர்கள் இரண்டு அணிகளாக விளையாடியதில்லை. ஆனால் இந்த சீசனில் A டீம், B  டீம் என விளையாடி வந்தனர். அதாவது விஷ்ணு, மணி, தினேஷ் மூவரும் ஒரு அணியாகவும், மாயா, நிக்சன், ஜோவிகா, பூர்ணிமா ரவி, அக்ஷயா ஆகியோர் ஒரு அணியாகவும் விளையாடி வந்தனர். அந்த வீட்டுக்குள் இந்த இரண்டு அணிகளும் சண்டை கட்டி நாறி வந்தனர்.

குறிப்பாக பைனலில் மாயா வின் பண்ண கூடாது என்றும் அவரை தவிர யார் வின் பண்ணாலும்  சரவெடி வெடித்து கொண்டாடுவேன் என்று கூறியபடி, வெடியை வெடித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். சரி வீட்டுக்குள் தான் அவர்கள் போட்டி, பொறாமை, கோபம், வன்மம் என காட்டுகிறார்கள் என்று பார்த்தால், தற்போது வீட்டை விட்டு வெளியே வந்த பிறகும் கூட வன்மத்தை காட்டி தான் வருகிறார்கள்.

அதாவது வீட்டை விட்டு வெளியே வந்த போட்டியாளர்கள் ஒன்றாக சேர்ந்து பார்ட்டி கொண்டாடவில்லை. தனித்தனியாகவே கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் தற்போது விஷ்ணு, பிராவோ தனியாகவும், மாயா, அக்ஷயா, ஜோவிகா, கானா பாலா ஆகியோர் வனிதா வீட்டில் கொண்டாடி உள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் ஏன் இப்படி வெளியே வந்த பிறகும் கூட சண்டை போட்டு கொள்கிறீர்கள்? என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். \

அடேங்கப்பா.., ஒரே மேட்சில் பாகிஸ்தான் சாதனையை பீட் செய்த இந்திய அணி.., சும்மா அதிருத்துல!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *