
தேமுதிக தலைவரும் தமிழ் சினிமாவின் தலைசிறந்த நடிகருமான கேப்டன் விஜயகாந்த் கொரோனா தொற்று காரணமாக இன்று காலை 4 மணி அளவில் உயிரிழந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது அவர் உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் தொண்டர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமா செல்லப்பிள்ளை கேப்டன் விஜயகாந்த் காலமானார்.., கண்ணீர் கடலில் தத்தளிக்கும் ரசிகர்கள்!!
இதனை தொடர்ந்து வாரி வள்ளல் கேப்டன் விஜயகாந்த் இறுதி சடங்கு நாளை மாலை 4.45 மணியளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் தகனம் செய்யப்பட இருக்கிறது. ஏற்கனவே தமிழக முதல்வர் ஸ்டாலின், விஜயகாந்தை முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.