Home » செய்திகள் » சென்னையில் பயங்கரம் – 16 வயது சிறுமியுடன் கடலில் விழுந்து தற்கொலை செய்த 14 வயது சிறுவன்!!

சென்னையில் பயங்கரம் – 16 வயது சிறுமியுடன் கடலில் விழுந்து தற்கொலை செய்த 14 வயது சிறுவன்!!

சென்னையில் பயங்கரம் - 16 வயது சிறுமியுடன் கடலில் விழுந்து தற்கொலை செய்த 14 வயது சிறுவன்!!

சென்னையில் பயங்கரம்: இன்றைய சமுதாயத்தில் காதல் தற்கொலைகள் அதிகமாகி கொண்டே இருக்கிறது. அந்த வகையில் சென்னை மாநகரத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அதாவது திருவொற்றியூர் கடற்கரை பகுதியில் திடீரென இரண்டு உடல்கள் கிடந்துள்ளது. இதை பார்த்த அங்கிருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில், காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அந்த சடங்களை பார்த்து சோதனை செய்த போது, 14 வயது சிறுவன் மற்றும் 16 வயது சிறுமி இருவரும் கைகளை இணைத்து துப்பட்டா கட்டிக் கொண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதனை தொடர்ந்து இந்த இரண்டு உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீஸ் விசாரணை செய்த போது  திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது அந்த சிறுவன் மற்றும் சிறுமி ஒரே இடத்தில் டியூஷன் படித்து வந்துள்ளனர். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் பயங்கரம் chennai news – latest news – tamilnadu news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் தகவல்!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top